அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 1 : Measurement
நினைவில் கொள்க
• 1960 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற
எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11ஆவது பொது மாநாட்டில், அறிவியல் அறிஞர்கள், இயற்பியல்
அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின் அதற்கான தேவையை உணர்ந்து, அங்கீகாரத்தை வழங்கினர்.
• நீளம், நிறை, காலம், வெப்பநிலை, மின்னோட்டம், பொருளின் அளவு
மற்றும் ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை அளவுகள் எனப்படுகின்றன.
• வெப்பநிலை என்பது, பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின்
அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவாகும். இதன் SI அலகு கெல்வின்.
• ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் (எலக்ட்ரான்கள்)
பாய்வதை மின்னோட்டம் என்கிறோம். மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர். பொருளின் அளவிற்கான
SI அலகு மோல்.
• ஒளிச்செறிவு கேண்டிலா எனும் அலகால் அளவிடப்படுகிறது.
• குவார்ட்ஸ் கடிகாரங்கள் குவார்ட்ஸ் எனப்படும் படிகத்தினால்
கட்டுப்படுத்தப்படும் மின்னணு அலைவுகள் மூலம் இயங்குகின்றன.
• அணுக்கடிகாரங்கள் அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக்
கொண்டு செயல்படுகின்றன.
• துல்லியத் தன்மை என்பது, கண்டறியப்பட்ட மதிப்பானது உண்மையான
மதிப்பிற்கு எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.
• அளவிடுதலில் நுட்பம் என்பது, மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன என்பதைக்
குறிக்கிறது.
• தோராயமாக்கல் முறை என்பது ஒரு இயற்பியல் அளவை அளவிடும்போது,
அதன் உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பைக் கண்டறியும் வழிமுறையாகும்.
சொல்லடைவு
தரப்படுத்துதல் ஒரு கருவியினை குறிப்பிட்ட வரம்பில்
கட்டமைக்கும் செயல்முறை.
மின்னணுவியல்
அலைகள் ஒரு மின்னணுச் சுற்றினால்
உருவாக்கப்படும் அலைவுகள்.
குவார்ட்ஸ்
படிகம் சிலிக்கன் மற்றும்
ஆக்சிஜனால் (SiO) உருவாக்கப்பட்ட படிகம்.
தளக்கோணம் இரு நேர்கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால்
உருவாகும் கோணம்.
திண்மக்கோணம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான
புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம்.
பொருளின்
அளவு
ஒரு பொருளில் உள்ள துகள்களின் அளவு.
மின்னோட்டம் ஒரு
விநாடி காலத்தில் பாயும் மின்னூட்டம்.
பிற நூல்கள்
1. Units and measurements - John Richards, S. Chand
publishing, Ram nagar, New Delhi.
இணைய வளங்கள்
1. http://www.npl.co.uk/reference/ measurement-units/
2. http://www.splung.com/content/sid/1/page/units
இணையச் செயல்பாடு
அளவீட்டியல்
நேரத்தைக் கணக்கிடும் பல்வேறு கருவிகள் பற்றி அறிவோமா?
படிநிலைகள்
படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி
இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.
படி 2: திரையில் காணப்படும்"History of time keeping
devices" என்பதனைச் சொடுக்கவும்.
படி 3: காணப்படும் பல்வேறு கருவிகளில் விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கவும்.
(எ.கா : Digital clock )
படி 4: இச்செயல்பாட்டின் மூலம் கடிகாரங்களின் வரலாற்றை நன்கு
அறிந்து கொள்ளவும்.
உரலி: https://playablo.com/Blog/5-fun-activities-to-teach-temperature-hot- and-cold-to-preschoolers/https://en.wikipedia.org/wiki/History_of_
timekeeping_devices
தேவையெனில் Adobe Flashஐ அனுமதிக்க.