Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | நவீன யுகத்தின் தொடக்கம்

அறிமுகம் | வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 06:49 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

நவீன யுகத்தின் தொடக்கம்

பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில், மேற்கத்திய ஐரோப்பா, அரசியல், சமூக, பண்பாடு, மதம் மற்றும் பொருளாதாரக் களங்களில் எதிர்பாராத பல மாற்றங்களுக்கு உள்ளானது.

பாடம் 8

நவீன யுகத்தின் தொடக்கம்



கற்றல் நோக்கங்கள்

பண்பாட்டு, மத மற்றும் பொருளாதார மாற்றங்கள் நவீன உலகை ஒழுங்குபடுத்தியது

மனிதநேயம்' என்ற கருத்து இடைக்கால மக்களின் எண்ணங்களை மாற்றியது

 பிராட்டஸ்டண்டு மதச்சீர்திருத்தத்தில், சடங்குகளை விட நம்பிக்கையே அதி முக்கியமானது.

  அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கிழக்கு நாடுகளுக்கு புதிய கடல்வழி கண்டுபிடிப்புகள் பொருளாதாரப் புரட்சிக்கும், காலனிகள் நிறுவப்பட்டமைக்கும் வித்திட்டது

 

அறிமுகம்

பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில், மேற்கத்திய ஐரோப்பா, அரசியல், சமூக, பண்பாடு, மதம் மற்றும் பொருளாதாரக் களங்களில் எதிர்பாராத பல மாற்றங்களுக்கு உள்ளானது. நவீன சகாப்தத்தின் வைகறையைப் பறைசாற்றி அறிவித்தவையாக இத்தாலிய மனிதநேயரான பெட்ராக்கின் நூலான கான்ஸோனியர், ஜெர்மன் இறையியலாளர் மார்ட்டின் லூதரின் 'தொண்ணூற்றைந்து குறிப்புகள்' மற்றும் போர்ச்சுகல் இளவரசரான ஹென்றியின் கடற்பயணப்பள்ளி போன்றவை நவீன சகாப்தத்தை முன்னறிவிப்பு செய்தன. புனித ரோமானியப் பேரரசும், கத்தோலிக்கத்திருச்சபையும் பலவீனமடைந்து அவப்பெயருக்கு ஆளாகியிருந்தன. அவற்றின் இடத்தில் தனிநபரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் தரும் புதிய திருச்சபைகளும், தேசிய அரசுகளும், வர்த்தகத் திறன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு வணிகப் புரட்சியும் தோன்றின.

சிந்தனையின் சுதந்திரம், தனிநபர்வாதம், பகுத்தறிவுவாதம் மற்றும் பொருளாதார, அறிவியல் சார்ந்த முன்னேற்றம் ஆகிய பண்புகளால் நவீனயுகம் அடையாளப்படுத்தப்பட்டது. மறுமலர்ச்சி, மதச்சீர்திருத்தம் மற்றும் புவியியல் ரீதியான கண்டுபிடிப்புகளால் உண்டான மாற்றங்களைப் பற்றி இப்பாடத்தில் காண்போம்.

Tags : Introduction | History அறிமுகம் | வரலாறு.
9th Social Science : History: The Beginning of the Modern Age : The Beginning of the Modern Age Introduction | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : நவீன யுகத்தின் தொடக்கம் - அறிமுகம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்