Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் :சரியான விடையைத் தேர்வு செய்க
   Posted On :  18.08.2022 11:09 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்

இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் :சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் : சரியான விடைகளுக்கான பதில்கள், தீர்வு மற்றும் விளக்கம்

வேதியியல் : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்

II. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில் 

) Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன

) d-ஆர் பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது

) Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது

) Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்ப தில்லை

விடை: ) d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது


2. பின்வருவனவற்றுள் எந்த d-தொகுதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட்டுள்ள இணைதிற கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டாலையும், சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற கூட்டினையும் பெற்று உள்ளது

) Cr 

) Pd

) Pt 

) இவை எதுவுமல்ல 

விடை : ) Cr


3. 3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி (M2+ / M ) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது

) Ti 

) Cu 

) Mn 

) Zn

விடை : ) Ti 


4. V3+ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது 

) Ti3+ 

) Fe3+ 

) Ni2+ 

) Cr3+

விடை : ) Ni2+


5. Mn + அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு 

) 5.92BM

) 2.80BM 

) 8.95BM

) 3.90BM

விடை : ) 5.92BM 


6. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது

) Fe3+ 

) Ti4+ 

) Co2+ 

) Ni2+

விடை : ) Ti4+


7. இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது 

) அவைகளின் காந்தப்பண்பு 

) அவைகளின் நிரப்பப்படாத d ஆர்பிட்டால்கள் 

) அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலை களைப் பெறும் தன்மையினைப் பெற்றிருப்பது

) அவைகளின் வேதிவினைபுரியும் திறன் 

விடை: ) அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலை களைப் பெறும் தன்மையினைப் பெற்றிருப்பது


8. ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது

) Vo2+ < Cr2O72- < MnO4-

) Cr2O72- <Vo2 + < MnO4-

) Cr2O72- <MnO4- < Vo2+ 

) MnO4- < Cr2O72- < Vo2+

விடை : ) Vo2+ < Cr2O72- < MnO4-


9. துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலோகக்கலவை 

) மோனல் உலோகம் 

) வெண்கலம் 

) மணி உலோகம் 

) பித்தளை

விடை: ) பித்தளை 


10. பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது

) K2Cr2O7 

) (NH4)2Cr2O

) KCIO3

) Zn(ClO3)2 

விடை : ) (NH4)2Cr2O


11. அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது

) ஆக்சலேட் 

) கார்பன் டை ஆக்ஸைடு 

) அசிட்டேட் 

) அசிட்டிக் அமிலம்

விடை: ) கார்பன் டை ஆக்சைடு 


12. பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது

) அமிலம் கலந்த K2Cr2O7 கரைசலின் வழியே H2S வாயுவைச் செலுத்தும் போது, பால் போன்ற வெண்மை நிறம் உருவாகிறது

) பருமனறி பகுப்பாய்வில் K2Cr2O7 ஐக்காட்டிலும் Na2Cr207 ஆனது பயன்படுத்தப் படுகிறது

) அமில ஊடகத்தில் K2Cr2O7 ஆரஞ்சு நிறத்தினைப் பெற்றிருக்கும்.

) PH மதிப்பானது 7 விட அதிகரிக்கும் போது K2Cr2O7கரைசலானது மஞ்சள் நிறமாகிறது

விடை: ) பருமனறி பகுப்பாய்வில் K2Cr2O7ஐக்காட்டிலும் Na2Cr2O7 ஆனது பயன்படுத்தப் படுகிறது


13. அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது 

) MnO42- 

) Mn2+ 

) Mn3+ 

) MnO2

விடை: ) Mn2+ 


14. (A) என்ற வெண்மைநிற படிகம் நீர்த்த HCl உடன் வினைபட்டு, மூச்சுத் திணறலை தரக்கூடிய (B) என்ற வாயுவை வெளியேற்றுகிறது மேலும் மஞ்சள் நிற வீழ்படிவு உண்டாகிறது. நீர்த்த H2SO4 கலந்த பொட்டாசியம் டை குரோமேட் கரைசலை, வாயு (B) ஆனது. பச்சை நிற கரைசல் (C) ஆக மாற்றுகிறது. A,B மற்றும் C ஆகியன முறையே 

) Na2SO3, SO2, Cr2(SO4)

) Na2S2O3, SO2,Cr2, (SO4)3 

) Na2S, SO2, Cr2 (SO4)3 

) Na2SO4, SO2, Cr2 (SO4)3

விடை : ) Na2SO3, SO2, Cr2(SO4)


 15. கார' pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br உடன் வினைபுரிந்து தருவது 

) BrO3-, MnO2

) Br2, MnO42-

) Br2, MnO2 

) BrO-, MnO42-

விடை: ) BrO3-, MnO2


16. 1 மோல் பொட்டாசியம் டை குரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை

) 1 

) 2 

) 3 

) 4 

விடை : ) 3


17. 1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த KMnO4 மோல்களின் எண்ணிக்கை

) 5 

) 3 

) 0.6 

) 1.5 

விடை : ) 0.6 


18. Mn ன் பழுப்பு நிறச் சேர்மம் (A) ஆனது HCI உடன் வினைபடும் போது, (B) என்ற வாயுவைத் தருகிறது. அதிக அளவு வாயு (B) யை NH3 உடன் வினைப்படுத்தும் போது (C) என்ற வெடிபொருள் சேர்மத்தைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக

) MnO2, Cl2, NCl3 

) MnO, Cl2, NH4Cl 

) Mn3O4, Cl2, NCl3 

) MnO2, Cl2 NCL2

விடை : ) MnO2, Cl2, NCl3


19. லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது

) யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது

) Pr லிருந்து Lu நோக்கிச் செல்லும் போது அயனி ஆரம் குறைவதால், காரத்தன்மையும் குறைகிறது

) அலுமினியத்தைவிட, அனைத்து லாந்தனான் களும் அதிக வினைத்திறன் மிக்கவை

) பருமனறி பகுப்பாய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜ னேற்றியாக பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது

விடை: ) அலுமினியத்தைவிட அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை


20. பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு 'அயனிடையாகாந்தத் தன்மையுடையது

) Eu2+ 

) Yb2+ 

) Ce2+ 

) Sm2+

 விடை : ) Yb2+ 


21. பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றநிலை யாது

) 4 

) 2 

) 5 

) 3 

விடை : ) 3


22. கூற்று : Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது. காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டு உள்ளது

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை: ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.


23.  ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை

) +2 

) +3 

) +4 

) +6 

விடை : ) +3 


24. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம் 

) Np, Pu, Am 

) U, Fm, Th 

) U, Th, Md 

) Es, No, Lr

விடை: ) Np, Pu, Am 


25. பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது

) La(OH)3 ஆனது Lu(OH) 3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது 

) லாந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறைகிறது

) La ஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை தனிமம் என்பதே சரி 

) லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப் பெற்று உள்ளன

விடை : ) La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது


12th Chemistry : UNIT 4 : Transition and Inner Transition Elements : Transition and Inner Transition Elements: Choose the best answer in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் :சரியான விடையைத் தேர்வு செய்க - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 4 : இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்