பைத்தான் - இனக்குழு உறுப்புகளை அணுகுதல் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects
இனக்குழு உறுப்புகளை அணுகுதல்
இனக்குழு உறுப்புகளை (அதாவது இனக்குழு மாறி அல்லது வழிமுறை
(செயற்கூறு)) புள்ளி செயற்குறி மூலம் அணுக முடியும்.
தொடரியல்
Object_name . class_member
எடுத்துக்காட்டு 10.1 : இனக்குழுவை வரையறுத்து அதன் உறுப்பு மாறிகளை அணுகும் நிரல்
class Sample:
#class variables
x, y = 10, 20
S=Sample( ) # class instantiation
print("Value of x = "', S.x)
print("Value of y = ", S.y)
print("Value of x and y = '',
S.x+S.y)
வெளியீடு
Value of x = 10
Value of y = 20
Value of x and y = 30
மேலே உள்ள நிரலில் இனக்குழுவின் பெயர் sample இனக்குழுவிற்குள்ளே,
X மற்றும் y மாறிகள் முறையே 10 மற்றும் 20 என்ற தொடக்க மதிப்புகளை இருத்துகிறது. இந்த
இரண்டு மாறிகளும் இனக்குழு மாறிகள் அல்லது இனக்குழுவின் உறுப்பு மாறிகள் (member
variable) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இனக்குழு சான்றுருவாக்கல் முறையில் இனக்குழுவின்
உறுப்புகளை அணுகுவதற்கு S என்ற பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு print கூற்றுகள்
இனக்குழுவின் மாறிகளான x மற்றும் y ன் மதிப்புகளை அச்சிடுகிறது. கடைசி print கூற்று
இரண்டு இனக்குழு மாறிகளான X மற்றும் y மதிப்புகளின் கூட்டுத் தொகையை அச்சிடுகிறது.