Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | இனக்குழு வழிமுறைகள்

பைத்தான் - இனக்குழு வழிமுறைகள் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects

   Posted On :  17.08.2022 07:28 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

இனக்குழு வழிமுறைகள்

பைத்தானில் இனக்குழு செயற்கூறு அல்லது வழிமுறை சாதாரண செயற்கூறுவைப்போல் ஒத்திருந்தாலும், ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு கண்டிப்பாக self என இருக்க வேண்டும்.

இனக்குழு வழிமுறைகள்

பைத்தானில் இனக்குழு செயற்கூறு அல்லது வழிமுறை சாதாரண செயற்கூறுவைப்போல் ஒத்திருந்தாலும், ஒரு சிறிய வேறுபாடு உள்ளது. இனக்குழு வழிமுறையின் முதல் அளபுரு கண்டிப்பாக self என இருக்க வேண்டும். வழிமுறைகளை அழைக்கும் போது இந்த அளபுருவுக்கு ம தேவையில்லை. பைத்தான் தானாகவே இதற்கு மதிப்பை வழங்கும். வழிமுறையில் அளபுருக்களை எடுத்துக் கொள்ளாத போதும், முதல் அளபுருவாக self வரையறுக்கப்பட வேண்டும். வழிமுறை ஒரே ஒரு அளபுருவை ஏற்க வரையறுக்கப்பட்டால் அது இரண்டு அளபுருவாக எடுத்துக் கொள்ளும். அதாவது, self மற்றும் வரையறுக்கப்பட்ட அளபுரு .

இனக்குழுவிற்குள் மாறிகளை அறிவிக்கும் பொழுது, வழிமுறைகள் முன்னொட்டாக இனக்குழுவின் பெயர் மற்றும் புள்ளி(.) செயற்குறியைக் கொண்டு இருக்க வேண்டும்.

குறிப்பு

இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் கூற்றுகள் முறையாக உள்தள்ளப்பட்டிருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு 10.2 : இனக்குழுவைப் பயன்படுத்தி மொத்தம் மற்றும் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடும் நிரல்.

class Student:

 mark1, mark2, mark3 = 45, 91,71  #class variable

def process(self):)     #class method

sum = Student.mark1 + Student.mark2 + Student.mark3

avg = sum/3

print("Total Marks = ", sum)

print("Average Marks="', avg)

return

S=Student()

S.process()

மேலே உள்ள நிரலில் இனக்குழு வரையறுக்கப்பட்டபின் S என்ற பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. S.process( ) என்ற கூற்று தேவையான வெளியீட்டைப் பெறுவதற்காக செயற்கூறுவை அழைக்கிறது.

mark1, mark2 மற்றும் mark3 ஆகிய மூன்று மாறிகளின் மதிப்பு முறையே 45, 91, 71 என அறிவிக்கப்பட்டுள்ளது. process() என்னும் வழிமுறை self அளபுருவுடன் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்த மதிப்பையும் அனுப்பப்போவதில்லை. process வழிமுறை முதலில் இனக்குழு மாறிகளின் மதிப்பை கூட்டுகிறது. Sum என்ற மாறியில் விடையைச் சேமிக்கிறது. சராசரியைக் கணக்கிட்டு காண்பிக்கிறது.

மேலே உள்ள நிரலின் படி, பின்வரும் வெளியீடு தோன்றும்.

வெளியீடு

Total Marks = 207

Average Marks = 69.0

எடுத்துக்காட்டு 10.3: இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்று சோதித்து அச்சிடும் நிரல்

class Odd_Even:

even = 0                                                   #class varaiable

def check(self, num):

if num%2==0:

print(num," is Even number")

else:

print(num," is Odd number")

n=Odd_Even()

x = int(input("Enter a value: "))

n.check(x)

இந்த நிரலை இயக்கும் போது பைத்தான், பயனர் கொடுக்கும் மதிப்பை உள்ளீடாகப் பெற்று, அதை வழிமுறைக்கு அனுப்பி, பொருள் மூலம் சரிபார்க்கிறது.

வெளியீடு1

Enter a value: 4

4 is Even number

வெளியீடு 2

Enter a value: 5)

5 is Odd number

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects : Class Methods Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : இனக்குழு வழிமுறைகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்