பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects
நினைவில் கொள்க
• பைத்தான் ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி ஆகும்.
• இனக்குழுக்களும், பொருள்களும் பொருள் நோக்கு நிரலாக்கத்தின்
முக்கிய அம்சங்களாகும்.
• பைத்தானில், class என்னும் சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தி
இனக்குழு வரையறுக்கப்பட்டுள்ளது.
• இனக்குழுக்குள் வரையறுக்கப்படும் மாறிகள், இனக்குழு மாறிகள்
எனவும் செயற்கூறுகள் வழிமுறைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
• ஒரு பொருளை உருவாக்கும் செயல்முறையே “சான்றுருவாக்கல்” எனப்படும்.
• ஒரு இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும் பொழுது ஆக்கி
என்னும் சிறப்புச் செயற்கூறு, தானாகவே இயக்கப்படுகிறது.
• இனக்குழுவில் உருவாக்கப்பட்ட பொருளின் பயன்பாடு முடிவுக்கு
வரும் போது அழிப்பி என்னும் சிறப்பு செயற்கூறு தானாகவே இயக்கப்படும்.
• பைத்தானில், _del_() செயற்கூறு அழிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
• இரட்டை அடிக்கீறினை முன்னொட்டாக கொண்ட மாறிகள் private மாறிகள்
ஆகும்.