பைத்தான் - இனக்குழுவை வரையறுத்தல் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects
இனக்குழுவை வரையறுத்தல்
பைத்தானில், இனக்குழுவை வரையறுக்க "class” என்னும் சிறப்புச்
சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு இனக்குழுவும் தனித்த பெயருடன் முக்காற்புள்ளி
( : ) யைக் கொண்டு முடியும்.
தொடரியல்
Class class_name:
statement_1
statement_2
………………………
……………………….
statement_n
இனக்குழு வரையறுப்பில், கூற்று (statement) என்பது மாறி அறிவிப்பாகவோ,
தேர்ந்தெடுப்பு கூற்றாகவோ, மடக்காகவோ அல்லது செயற்கூறு வரையறையாகவோ இருக்கலாம். இனக்குழுக்குள்ளே
வரையறுக்கப்படும் மாறிகள் இனக்குழு மாறிகள் (Class variables) என்றும் செயற்கூறுகள்
வழிமுறைகள் (methods) என்றும் அழைக்கப்படும். இனக்குழு மாறிகள் மற்றும் வழிமுறைகள்
சேர்ந்து இனக்குழுவின் உறுப்புகள் (members) எனப்படும். இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின்
பொருள்கள் அல்லது சான்றுருக்கள் மூலமாகவே அணுகுதல் வேண்டும். ஒரு இனக்குழுவை பைத்தான்
நிரலில் எங்கு வேண்டுமானாலும் வரையறுக்கலாம்.
எடுத்துக்காட்டு: இனக்குழுவை வரையறுக்கும் நிரல்
class Sample:
x, y = 10, 20
# class variables
மேலே குறிப்பிட்டுள்ள இனக்குழு வரையறையில், “sample” என்பது
இனக்குழுவின் பெயர். இதில் X மற்றும் y என இரு மாறிகள் உள்ளன. இதன் தொடக்க மதிப்பு
முறையே 10 மற்றும் 20 ஆகும். இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்பட்டுள்ள மதிப்புகளை அணுகுவதற்கு
இனக்குழுவின் பொருள் அல்லது சான்றுரு தேவை.