பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்: பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects
கணினி அறிவியல் : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்
மதிப்பீடு
பகுதி - அ
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக (1 மதிப்பெண்)
1. பின்வருவனவற்றுள் எவை பொருள்
நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய அம்சம் ஆகும்?
அ)
ஆக்கி மற்றும் இனக்குழு
ஆ)
ஆக்கி மற்றும் பொருள்
இ)
இனக்குழு மற்றும் பொருள்
ஈ)
ஆக்கி மற்றும் அழிப்பி
விடை: இ) இனக்குழு
மற்றும் பொருள்
2. இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும்
செயற்கூறு எது:
அ)
செயற்கூறு
ஆ)
கூறு
இ)
வழிமுறை
ஈ)
பிரிவு
விடை: இ) வழிமுறை
3. இனக்குழு உறுப்புகள் எந்த செயற்குறியின்
மூலம் அணுகப்படுகிறது?
அ)
&
ஆ)
.
இ)
#
ஈ)
%
விடை : ஆ).
4. பொருள் உருவாக்கப்படும் போது
தானாகவே இயக்கப்படும் செயற்கூறு எது?
அ)
_object_()
ஆ)
_del_()
இ)
func_()
ஈ)
_init_ ()
விடை : ஈ)
_init_()
5. private இனக்குழு மாறியின்
முன்னொட்டு எது
அ)
_
ஆ)
&&
இ)
##
ஈ)
**
விடை : அ) _
6. பின்வரும் வழிமுறைகளில் எது
அழிப்பியாகப் பயன்படுகிறது?
அ)
_init_()
ஆ)
_dest_()
இ)
_rem_()
ஈ)
_del_()
விடை : ஈ)
_del_()
7. பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு
அறிவிப்பு சரியானது?
அ)
class class_name
ஆ)
class class_name<>
இ)
class class_name:
ஈ)
class class_name[ ]
விடை : இ)
class class_name[]
8. பின்வரும் நிரலின் வெளியீடு
என்ன?
class Student:
def __init__(self, name):
self.name=name
S=Student("Tamil”)
அ)
Error
ஆ)
Tamil
இ)
name
ஈ)
self
விடை : ஆ)
Tamil
9. பின்வருவனவற்றுள் எது
private இனக்குழு மாறி?
அ)
_num
ஆ)
##num
இ)
$$num
ஈ)
&&num
விடை : அ) _num
10. பொருளை உருவாக்கும் செயல்முறை
எது:
அ)
ஆக்கி
ஆ)
அழிப்பு
இ)
மதிப்பிருத்தல்
ஈ)
சான்ருறுவாக்கல்
விடை: ஈ) சான்ருறுவாக்கல்
பகுதி - ஆ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (2 மதிப்பெண்கள்)
1. இனக்குழு என்றால் என்ன?
விடை. இனக்குழு என்பது இனக்குழு மாறிகள் மற்றும் செயற்கூறுகுள் வழிமுறைகள்
கலந்த கலவையே இனக்குழு எனப்படும். பைத்தானில் மிக முக்கிய கட்டமைப்பு கூறுகளாகத் திகழ்பவை
இனக்குழுவாகும். இனக்குழு என்பது பொருளின் வார்ப்புரு ஆகும்.
2. சான்றுருவாக்கல் என்றால் என்ன?
விடை. இனக்குழு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குழுவின் பொருள் அல்லது சான்றுரு
உருவாக்கப்பட வேண்டும். பொருளை உருவாக்கும் இந்த முறைக்கு "சான்றுருவாக்கல்'
(instantiation) என்று பெயர்.
3. பின்வரும் நிரலின் வெளியீடு
என்ன?
class Sample:
_num=10
def disp(self):
print(self._num)
S=Sample()
S.disp()
print(s._num)
விடை. 10
10
4. பைத்தானில் ஆக்கியை எவ்வாறு
உருவாக்குவாய்?
விடை. _init_வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம்
def __init__(self, [args .......]):
<statements>
5. அழிப்பியின் நோக்கம் என்ன?
விடை. இனக்குழுவில் உருவாக்கப்பட்ட பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும் போது
அழிப்பி என்னும் சிறப்பு செயற்கூறு தானாகவே இயக்கப்படும்.
பகுதி- இ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (3 மதிப்பெண்கள்)
1. இனக்குழு உறுப்புகள் என்றால்
என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?
விடை. (i) இனக்குழுக்குள்ளே வரையறுக்கப்படும் மாறிகள் இனக்குழு மாறிகள்
(Class variables) என்றும் செயற்கூறுகள் வழிமுறைகள் (methods) என்றும் அழைக்கப்படும்.
(ii) இனக்குழு மாறிகள் மற்றும் வழிமுறைகள் சேர்ந்து இனக்குழுவின் உறுப்புகள்
(members) எனப்படும். இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் பொருள்கள் அல்லது சான்றுருக்கள்
மூலமாகவே அணுகுதல் வேண்டும்.
2. இரண்டு private இனக்குழு மாறிகளுடன்
வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத்தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.
விடை . Class sum:
- a = 10
- b = 20
def display (self):
print (“sum='', (self. - a + self. - b))
s= sum ()
s. display ()
3. கொடுக்கப்பட்ட வெளியீட்டை பெற
பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை காண்க.
class Fruits:
def __init__(self, f1, f2):
self.f1=f1
self.f2=f2
def display(self):
print("Fruit 1 = %s,
Fruit 2 =
%s"%{self.f1, self.f2))
F= Fruits ('Apple', 'Mango')
del F.display
F.display()
விடை. வெளியீடு
Fruit 1 = Apple, Fruit 2 = Mango
del F.display எனும் கூற்று தேவையில்லாத ஒன்று. பின்வரும் வெளியீடு
கிடைக்க இந்த கூற்று தேவையில்லாத ஒன்று.
4. பின்வரும் நிரலின் வெளியீடு
என்ன?
class Greeting:
def_init_(self, name):
self._name = name
def display(self):
print("Good Morning
"', self._name)
obj=Greeting('Bindu
Madhavan')
obj.display)
விடை. Good morning Bindu Madhavan
5. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பிகளை
எவ்வாறு வரையறுப்பாய்?
விடை. (i) ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும்பொழுது ஆக்கி என்னும்
சிறப்புச் செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது.
(ii) பைத்தானில், "init" என்னும் சிறப்பு செயற்கூறு ஆக்கியாக
செயல்படுகிறது. இது இரட்டை அடிக்கீறில் (Under Score) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன்
முடிய வேண்டும்.
(iii) இந்த செயற்கூறு சாதாரண செயற்கூறுவைப் போல செயல்படும். ஆனால் பொருள்
உருவாக்கப்பட்டவுடன் தானாகவே இயக்கப்படும்.
(iv) இந்த ஆக்கி செயற்கூறை அளபுருக்களுடனோ அல்லது இல்லாமலோ வரையறுக்கலாம்.
_ init - வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம்
def_init_(self, [args ........]): <statements>
பகுதி - ஈ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (5 மதிப்பெண்கள்)
1. எழுது பொருட்களை
(stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருட்களின்
பெயர் மற்றும் பிராண்ட்-யை ஒரு dictionary-யில் சேமிக்க வேண்டும்.
விடை . Class stationary:
def getdata (self):
self. Itemname = input (“enter name of the
item”)
self. Brand = input ("'enter brand name')
item = {}
ch = 'y'
while (ch == 'y'):
print (“1. Add items \n 2. Delete items”)
n= int (input ("enter your choice”))
if (n == 1):
s = stationary ()
s. get data ()
item. Append {S}
elif (n === 2):
del item
else: print (“Invalid Input").
ch = input ("Do you want to continue (Y/N)")
செய்முறைப் பயிற்சி
1. இனக்குழுவைப் பயன்படுத்தி மாணவர்களின்
பெயர் மற்றும் மதிப்பெண்களைப் பட்டியலாக சேமித்து மொத்த மதிப்பெண்ணை அச்சிடும் பைத்தான்
நிரலை எழுதுக.
விடை: Class total :
name=[]
mark == [ ]
def get (self):
num = input (“How many students? :')
for i in self. num;
self. n = input (“Enter student name')
self name. append (self. n)
self. m = input (“enter mark of the student”)
mark = append (self. m)
def display (self):
for i in self. num
print (name [i] ":'', mark [i])
t=t+ mark [i]
print ("Total marks", t)
t=total()
t. get)
t. display ()
2. இனக்குழுவைப் பயன்படுத்தி முக்கோணத்தின்
மூன்று பக்கங்களின் அளவை உள்ளீடாகப் பெற்று பரப்பளவைக் கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.
விடை : Class area:
def area (self, b, h):
print (“Area of Triangle”, (b* h)/2)
A = area ()
b=int (input (“enter base'))
h == int (input (“enter height''))
(A) area (b, h)
3. இரண்டு தூரங்களின் அளவை படிக்க,
காண்பிக்க, கூட்ட மற்றும் கழிக்க உதவும் பட்டியல் முறை (Menu driven) நிரலை எழுதுக.
விடை: def add (d1, d2)
- return d1 + d2
def subtract (d1, d2)
return d1 - d2
“/. Read \n”, “2. Display \n”,
print (“Menu |n", "1. Read |n", "2.Display
lin", "3.Add|n", "4.subtract |n") 3. Add \n”, “4.
Subtract \n")
ch = int (input (“Enter your choice"))
if(ch == 1):
X == int (input (“Enter distance 1"))
y = int (input (“Enter distance 2"))
elif (ch === 2):
print (“Distance 1", y).
print (“Distance 2”, y).
elif (ch == 3):
print (add(x, y))
elif (ch = = 4):
print (substract (x, y))
else:
print ("Invalid Input”)