Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | Public மற்றும் Private தரவு உறுப்புகள்

பைத்தான் - Public மற்றும் Private தரவு உறுப்புகள் | 12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects

   Posted On :  17.08.2022 07:28 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

Public மற்றும் Private தரவு உறுப்புகள்

இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் மாறி கொடாநிலையாக public மாறி ஆகும்.

Public மற்றும் Private தரவு உறுப்புகள்

இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் மாறி கொடாநிலையாக public மாறி ஆகும். இந்த மாறிகளை புள்ளி செயற்குறி (.) பயன்படுத்தி நிரலில் எங்கு வேண்டுமானாலும் அணுகலாம். இரட்டை அடிக்கீறலை முன்னொட்டாக கொண்ட மாறிகள் private ஆகும். இந்த மாறிகளை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் அணுக முடியும்.

எடுத்துக்காட்டு 10.7 : private மற்றும் public மாறிகளை விளக்கும் நிரல்

class Sample:

def __init__(self, nl, n2):

self.nl=nl

self.__n2=n2

def display(self):

print("Class variable 1 = "', self.n1)

print("Class variable 2 = ", self.__n2)

S=Sample(12, 14)

S.display()

print("Value 1 = "', S.n1)

print("Value 2 = ", S.__n2)

மேலே உள்ள நிரலில் n1 மற்றும் n2 என இரண்டு இனக்குழு மாறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. n1 என்பது public மாறி n2 என்பது Private மாறி ஆகும். Display ( ) உறுப்பு செயற்கூறு இந்த இரண்டு மாறிகளுக்கும் அனுப்பப்பட்ட மதிப்புகளைக் காண்பிப்பதற்காக வரையறுக்கப்பட்டுள்ளது.

இனக்குழு மாறி n2 private ஆக இருந்தபோதிலும் இனக்குழுவின் உள்ளே உள்ள print கூற்றுகள் வெற்றிகரமாக 11 மற்றும் n2 மாறிகளின் மதிப்புகளைக் காண்பிக்கிறது. ஏனென்றால், இந்த நிரலில் இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்பட்ட வழிமுறையின் மூலம் n2 அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இனக்குழுவின் வெளியில் இருந்து n2 வின் மதிப்பை அணுக முயற்சித்தால் பிழை செய்தியைக் காண்பிக்கும். ஏனென்றால் private மாறிகள் இனக்குழுவின் வெளியில் இருந்து அணுக முடியாது.

வெளியீடு

Class variable 1 = 12

Class variable 2 = 14

Value 1 = 12

Traceback (most recent call last):

File "D:/Python/Class-Test-04.py", line 12, in <module>

print("Value 2 = ", S.__n2)

AttributeError: 'Sample' object has no attribute '_n2'

Tags : Python பைத்தான்.
12th Computer Science : Chapter 10 : Python Modularity and OOPS : Python Classes and Objects : Public and Private Data Members Python in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் : Public மற்றும் Private தரவு உறுப்புகள் - பைத்தான் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 10 : தமிழ் OOPS : பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்