ஆல்கஹால்களின் அமிலத் தன்மை
ப்ரான்ஸ்டட் கொள்கைப்படி, அமிலம் என்பது புரோட்டான் வழங்கியாகும். மேலும் புரோட்டானை வழங்கும் அதன் திறன் அமில வலிமையாகும். ஆல்கஹால்கள், நீருடன் ஒப்பிடத்தக்க அளவில் வலிமை குறைவான அமிலமாகும். மெத்தனாலைத் தவிர பிற அனைத்து ஆல்கஹால்களும் நீரைவிட வலிமை குறைந்தவை நீரின் Ka மதிப்பு 1.8×10-16 ஆனால் ஆல்கஹால்களின் Ka மதிப்பானது 10-18 முதல் 10-16 என்ற அளவில் இருக்கும்.
ஆல்கஹால்கள் சோடியம், அலுமினியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்களுடன் வினைபுரிந்து ஆல்காக்சைடுகளைத் தருகின்றன மேலும் இவ்வினையில் ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. ஆனால், ஆல்கஹால்கள் NaOH உடன் வினைபுரிந்து ஆல்காக்சைடுகளைத் தருவதில்லை .
2C2H5 - OH + 2Na → 2C2H5ONa + H2 ↑
மேற்கண்டுள்ள வினை ஆல்கஹால்களின் அமிலத் தன்மையை விளக்குகிறது.