வகைப்பாடு, வினைசெயல் தொகுதியின் அமைப்பு, IUPAC பெயரிடும் முறை - ஈதர்கள் | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers

   Posted On :  05.08.2022 07:55 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

ஈதர்கள்

இரண்டு ஆல்கைல் / அரைல் தொகுதிகளை ஒரு ஆக்ஸிஜன் அணுவின் மூலம் இணைக்கும் கரிமச் சேர்மங்களுக்கு ஈதர்கள் என்று பெயர்.

ஈதர்கள்

இரண்டு ஆல்கைல் / அரைல் தொகுதிகளை ஒரு ஆக்ஸிஜன் அணுவின் மூலம்   இணைக்கும் கரிமச் சேர்மங்களுக்கு ஈதர்கள் என்று பெயர். ஹைட்ரோ கார்பனில் உள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவிற்கு பதிலாக ஆல்காக்ஸி (-OR) அல்லது அரைல் தொகுதி (-OAr) களால் பதிலீடு செய்யப்பட்ட ஹைட்ரோ கார்பனின் பெறுதிகள் என ஈதர்கள் கருதப்படுகின்றன. அலிபாட்டிக் ஈதர்களின் பொதுவாய்பாடு CnH2n+2+O.


வகைப்பாடு:



வினைசெயல் தொகுதியின் அமைப்பு

ஈதரில் உள்ள இரண்டு ஆல்கைல் தொகுதிகளுக்கு இடையில் அமையும் ஆக்ஸிஜன் அணு ஆல்கஹாலில் உள்ள - O-H தொகுதியை ஒத்துள்ளது. ஆக்ஸிஜன் அணு sp3 இனக்கலப்பை பெற்றுள்ளது. ஆக்ஸிஜனின் sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால் அதனுடன் இணைந்துள்ள இரண்டு ஆல்கைல் தொகுதி Cன் sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலுடன் நேர்கோட்டில் மேல் பொருந்தி இரண்டு σ பிணைப்பை உருவாக்குகிறது. C-O-C பிணைப்பு கோணம் நான்முகி பிணைப்பு கோணத்தை விட சற்று அதிகமாக இருக்கும். ஏனெனில் இரண்டு பெரிய ஆல்கைல் தொகுதிகளுக்கிடையே விலக்கு இடையீடு இருப்பதே காரணமாகும்.



IUPAC பெயரிடும் முறை:

பின்வரும் அட்டவணையில் ஈதர்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல் விளக்கப்பட்டுள்ளது.


தன்மதிப்பீடு

பின்வரும் ஈதர்களின் IUPAC பெயரினை எழுதி அதனை எளிய மற்றும் கலப்பின ஈதர்களாக வரிசைப்படுத்துக

(i) CH3 – CH2 – O - (CH2)3 -CH3 

(iv) (CH3) 3C—O-C (CH3) 3 

(v) CH2 = CH-CH(CI)-O-CH3

 (vi) டைபென்சைல் ஈதர்

(vii) வினைல் அல்லைல் ஈதர்



Tags : Classification, Structure of functional group, IUPAC System வகைப்பாடு, வினைசெயல் தொகுதியின் அமைப்பு, IUPAC பெயரிடும் முறை.
12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : Ethers Classification, Structure of functional group, IUPAC System in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : ஈதர்கள் - வகைப்பாடு, வினைசெயல் தொகுதியின் அமைப்பு, IUPAC பெயரிடும் முறை : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்