இயற்பியல் பண்புகள்
ஈதர்கள் முனைவு தன்மை உடையது. ஈதர்களின் இருமுனைத்திருப்புத்திறன் 2 தனித்த இணை எலக்ட்ரான்களின் பங்களிப்புடன் கூடிய 2 C-O பிணைப்புகளின் வெக்டார் கூடுதலிலிருந்து அறியலாம். உதாரணமாக, டை எத்தில் ஈதரின் இருமுனை திருப்புதிறன் மதிப்பு 1.18 ஈதர்களின் கொதிநிலை அதனை ஒத்த ஆல்கேன்களை விட அதிகமாகவும், அதனை ஒத்த ஆல்கஹால்களை விட குறைவாகவும் உள்ளது.
ஈதரில் உள்ள ஆக்ஸிஜன் நீருடன் ஹைட்ரஜன் பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் நீரில் கரைகிறது. ஈதர்கள் முணைவு மற்றும் முனைவற்ற பொருட்களில் வெகுவாக கரைகிறது.
ஈதர்களின் வேதிப் பண்புகள்
1. ஈதர்களின் கருக்கவர் பதிலீட்டு வினைகள்
HBr அல்லது HI உடன் ஈதர் கருக்கவர் பதிலீட்டு வினைகளில் ஈடுபடும் HI ஆனது HBr ஐ விட அதிக வினையாற்றல் கொண்டது.
வினைவழிமுறை
ஈதரில் ஓரிணைய ஆல்கைல் தொகுதி இருந்தால் SN2 வினையிலும் மூவிணைய ஆல்கைல் தொகுதி இருந்தால் SN1 வினையிலும் ஈடுபடும். ஈதரில் புரோட்டான் ஏற்றம் நடைபெற்ற உடன் ஹாலைடு அயனி வினைபுரிய ஆரம்பிக்கிறது. இந்த ஹாலைடு அயனி ஈதர் ஆக்ஸிஜனுடன் இரண்டு ஆல்கைல் தொகுதிகளில் எந்த தொகுதியில் கொள்ளிட தடை குறைவாக உள்ளதோ அத்தொகுதியுடன் வினைபுரிகிறது.
அதிக அளவு HI அல்லது HBr சேர்க்கும் போது ஆல்கஹால் மற்றும் ஆல்கைல் ஹாலைடைத் தருகிறது.
தன் மதிப்பீடு
1 மோல் HI மூவிணைய பியூடைல் மெத்தில் ஈதர் உடன் வினைபுரிகிறது. எனில் வினைபொருள் மற்றும் வினை வழிமுறைகளை எழுதுக.
ஈதர்களில் சுய ஆக்சிஜனேற்றம்
வளிமண்டல ஆக்ஸிஜன் முன்னிலையில் ஈதர்களை சேமித்து வைக்கும் போது, அது மெதுவாக ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஹைட்ரோ பெராக்சைடு மற்றும் டை ஆல்கைல் பெர்ராக்சைடு தருகிறது. இது வெடிக்கும் தன்மையுடையது. இவ்வாறு வளிமண்டல ஆக்சிஜனுடன் தானாக நடக்கும் வினைக்கு சுய ஆக்சிஜனேற்ற வினை என்று பெயர்.
டை எத்தில் ஈதரின் சில வினைகள்
அரோமேட்டிக் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைகள்
ஆல்காக்சி தொகுதி (-OR ) அரோமேட்டிக் வளையத்தை எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினைக்கு தூண்டுகிறது. மேலும், இது ஆர்த்தோ , பாரா வழிநடத்தும் தொகுதியாகும்.
i) ஹேலோஜனேற்றம்
வினைவேகமாற்றி இல்லாத சூழ்நிலையிலும் அனிசோல் அசிட்டிக் அமிலத்தில் கலந்த புரோமினுடன் புரோமினேற்றம் அடைகிறது. இதில் அனிசோல் பாரா புரோமோ அனிசோல் முக்கிய விளைப்பொருளாக கிடைக்கிறது.
ii) நைட்ரோ ஏற்றம்
அனிசோல் நைட்ரோ ஏற்ற கலவை (அடர் H2SO4 /அடர் HNO3) உடன் வினைபட்டு ஆர்த்தோ நைட்ரோ அனிசோல் மற்றும் பாரா நைட்ரோ அனிசோலின் கலவையைக் கொடுக்கிறது.
iii) ப்ரீடல் கிராப்ட்ஸ் வினை
நீரற்ற AICI2 முன்னிலையில் அனிசோல் ப்ரீடல் கிராப்ட்ஸ் வினைக்கு உட்படுகிறது.