Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | சரியான விடையைத் தேர்வு செய்க

ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல் - சரியான விடையைத் தேர்வு செய்க | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

சரியான விடையைத் தேர்வு செய்க

வேதியியல் : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : சரியான விடையைத் தேர்வு செய்க
வேதியியல் : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க 


1. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மேயர் சோதனையில் நீலநிறத் தினைத் தருகிறது. 3.7g 'X' ஐ உலோக சோடியத்துடன் வினைப்படுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்? 

அ) CH3 CH (OH) CH2CH3 

ஆ) CH3 - CH (OH) – CH3

இ) CH3 -C (OH) - (CH3)2 

FT) CH3-CH2 -CH (OH) - CH2 - CH3

விடை : அ) CH3 CH (OH) CH2CH3 

தீர்வு :

2R - OH + 2Na– 2 RONa + H2  ↑ 2 மோல் ஆல்கஹால் 1 மோல் H2 வைத் தருகின்றது 273K மற்றும் 1 atm அதன் கனஅளவு 22.41 ஆல்கஹால்களின் மோல்களின் எண்ணிக்கை 

2 மோல்கள் R - OH / 22.4L of H2 × 560 mL

= 0.05 மோல்கள்

ஃ மோல்களின் எண்ணிக்கை = நிறை / மூலக்கூறுநிறை

⇒ மூலக்கூறுநிறை 3.7/0.05 - 74gmol-1

R- OHன் பொதுவாய்ப்பாடு Cn H2n+1 - OH ஆகும். 

ஃ n(12) + (2n+1) (1) + 16 + 1 = 74 

14n = 74 - 18 

14n = 56

n = 56 / 14 = 4

ஈரிணைய ஆல்கஹால் 4 கார்பன் கொண்டுள்ளது. CH3 CH (OH) CH2CH3 


2. பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுக்க மூவிணைய ஆல்கஹாலைத் தரும்? 

அ) பென்சால்டிஹைடு

ஆ) புரப்பனாயிக் அமிலம் 

இ) மெத்தில் புரப்பியோனேட்

ஈ) அசிட்டால்டிஹைடு 

விடை : இ) மெத்தில் புரப்பியோனேட்

 தீர்வு :




ஈ) இதில் எதுவுமில்லை

விடை : அ)

தீர்வு :

i.e., CH3 – CH2 – CH2 – CH2- CH2 - OH 

ஹைட்ரோ போரோனேற்றம் – எதிர்மார்கோனிகாப் விளைபொருள் 


4. ஈத்தீன் ----HOCl→A ---X→ டை ஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்பன முறையே 

அ) குளோரோ ஈத்தேன் மற்றும் NaOH 

ஆ) எத்தனால் மற்றும் H2 SO4

இ) 2 குளோரோஎத்தன் 1-ஆல் மற்றும் NaHCO3 

ஈ) எத்தனால் மற்றும் H2O 

விடை: இ) 2 குளோரோஎத்தன் 1-ஆல் மற்றும் NaHCO3

தீர்வு:


5. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்? 

அ) 2 - நைட்ரோபீனால்

ஆ) 4 - குளோரோபீனால் 

இ) 4 - நைட்ரோபீனால் 

ஈ) 3 - நைட்ரோபீனால்

விடை: இ) 4- நைட்ரோபீனால்



6. என்ற சேர்மத்தை அடர் H2SO4 உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருள்

தீர்வு :



7. கார்பாலிக் அமிலம் என்பது 

அ) பீனால் 

ஆ) பிக்ரிக் அமிலம் 

இ) பென்சாயிக் அமிலம் 

ஈ) பீனைல் அசிட்டிக் அமிலம்

விடை : அ) பீனால்


8. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினை பட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால் டிஹைடைத் தருகிறது? 

அ) டைகுளோரோ மீத்தேன் 

ஆ) ட்ரைகுளோரோ ஈத்தேன் 

இ) ட்ரைகுளோரோ மீத்தேன் 

ஈ) CO2

விடை : இ) ட்ரைகுளோரோ மீத்தேன்


9. (CH3)3-C-CH(OH) CH3 X (முதன்மை விளைபொருள்)

அ) (CH3)2 CCH=CH2

ஆ) (CH3)2 C=C(CH3)2

இ) CH2 = C(CH3)CH2 – CH2 CH3 

ஈ) CH2 = C(CH3)CH2 – CH2 CH3

விடை : ஆ) (CH3)2 C=C(CH3)2

தீர்வு :


10.என்ற சேர்மத்தின் சரியான IUPAC பெயர் 

அ) 4 - குளோரோ - 3,2 - டைமெத்தில் பென்டன் - 1-ஆல் 

ஆ) 2,3 - டைமெத்தில் - 4- குளோரோ பென்டன் -1-ஆல் 

இ) 2,3,4-ட்ரை மெத்தில் - 4- குளோரோ பியூட்டன் -1-ஆல் 

ஈ) 4- குளோரோ - 2,3,4- ட்ரைமெத்தில் பென்டன் - 1-ஆல்

விடை: அ) 4- குளோரோ - 2,3 - டை மெத்தில் பென்டன் -1-ஆல் 


11. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.

காரணம்: பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது. 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு. 

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு. 

விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.


12. எத்தனால்  Z. என்ற வினையில் 'Z' என்பது

அ) ஈத்தேன் 

ஆ) ஈத்தாக்ஸி ஈத்தேன் 

இ) எத்தில்பைசல்பைட் 

ஈ) எத்தனால்

விடை : ஈ) எத்தனால் 

தீர்வு :

CH3 - CH2 - OH ---PCl5→ CH3 - CH2 - Cl --ale.KOH→CH2 = CH2 --H2SO4/H2O→ CH3 - CH2 – OH

(Z) எத்தனால்


13. என்ற வினையினை இவ்வாறு வகைப்படுத்தலாம்

அ) நீரகற்றம்

ஆ) வில்லியம்சனின் ஆல்கஹால் தொகுப்பு முறை 

இ) வில்லியம்சனின் ஈதர் தொகுப்பு முறை 

ஈ) ஆல்கஹாலின் ஹைட்ரஜன் நீக்கவினை 

விடை : இ) வில்லியம்சனின் ஈதர் தொகுப்பு முறை 

தீர்வு :

வளைய ஆல்கஹால் → சோடியம் வளைய ஆல்காக்சைடு - வில்லியம்சன் ஈதர் தொகுத்தல் வாய்ப்பு


14. நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது. 

அ) C6H5COOH 

ஆ) C6H5COCH3 

இ) C6H5CO C6H5 

ஈ) C6H5- OH

விடை : ஈ) C6H5- OH


15. கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக வினைத்திறன் மிக்கது. காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது. 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும்

காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்க மல்ல. 

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்


16. HO CH2 CH2 - OH ஐ பெர் அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது 

அ) மெத்தனாயிக் அமிலம் 

ஆ) கிளையாக்சால் 

இ) மெத்தனால்

ஈ) CO2

விடை : இ) மெத்தனால்


17. தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்பொருளாக பயன்படுவது எது? 

அ) மெத்தனால் 

ஆ) எத்தனால் 

இ) நியோபென்டைல் 

ஈ) எத்தன் -1, 2-டை ஆல்

விடை : ஈ) எத்தன் -1, 2-டை ஆல்


18. என்ற வினையானது எதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

அ) உர்ட்ஸ் வினை

ஆ) வளையமாதல் வினை 

இ) வில்லியம்சன் தொகுப்பு முறை

ஈ) கோல்ப் வினை

விடை : இ) வில்லியம்சன் தொகுப்பு முறை 


19. C3 H8O என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Y ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயடோபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?

அ) புரப்பன் - 2-ஆல் 

ஆ) புரப்பன் -1-ஆல் 

இ) ஈத்தாக்ஸி ஈத்தேன் 

ஈ) மீத்தாக்ஸி ஈத்தேன் 

விடை : ஈ) மீத்தாக்ஸி ஈத்தேன்

தீர்வு :



20. பின்வரும் ஈதர்களுள் எதனை சூடான HI உடன் வினைபடுத்தும் போது மெத்தில் ஆல்கஹால் உருவாகிறது?

அ) (H3C)3 – C – O - CH3 

ஆ) (CH3)2 – CH - CH2 – O - CH3 

இ) CH3 - (CH2)3 – O - CH3 

ஈ) CH3 - CH2 – CH – O - CH3 

விடை : அ) (H3C)3 –C – O - CH3 

தீர்வு:



 21. வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு 

அ) SN1 வினை 

ஆ) SN2- வினை 

இ) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை 

ஈ) எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை

விடை : ஆ) SN2 வினை 


22. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுன் வினை புரிந்து தரும் நிறம் 

அ) சிவப்பு நிறம் 

ஆ) ஊதா நிறம் 

இ) அடர் பச்சை நிறம் 

ஈ) எவ்வித நிறமும் உருவாவதில்லை

விடை : ஆ) ஊதா நிறம்


Tags : Hydroxy Compounds and Ethers | Chemistry ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல்.
12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : Choose the correct answer Hydroxy Compounds and Ethers | Chemistry in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : சரியான விடையைத் தேர்வு செய்க - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | வேதியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்