பெயரிடுதல், தயாரிக்கும் முறைகள், இயற்பண்புகள் மற்றும் வேதிப் பண்புகள் - ஆல்கைல் ஐசோசயனைடுகள் (கார்பைலமீன்கள்) | 12th Chemistry : UNIT 13 : Organic Nitrogen Compounds
ஆல்கைல் ஐசோசயனைடுகள் (கார்பைலமீன்கள்)
ஐசோசயனைடுகளுக்கு பெயரிடுதல்
இவைகள் ஆல்கைல் ஐசோசயனைடுகள் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன. IUPAC முறையில் ஆல்கைல் கார்பைலமீன்கள் என பெயரிடப்படுகின்றன.
அட்டவணை : ஆல்கைல் ஐசோசயனைடுகளுக்கு பெயரிடுதல்
1. ஓரிணைய அமீன்களிலிருந்து தயாரித்தல் (கார்பைலமீன் வினை)
அலிபாட்டிக் | அரோமேட்டிக் அமீன்களை KOH முன்னிலையில் CHCl3 உடன் வினைப்படுத்த கார்பைலமீன் உருவாகிறது.
2. ஆல்கைல் ஹாலைடுகளிலிருந்து தயாரித்தல்
எத்தில் புரோமைடை எத்தனால் கலந்த AgCN உடன் வினைபடுத்தும் போது எத்தில் ஐசோ சயனைடு மிகையளவு உருவாகும் இவ்வினையில் எத்தில் சயனைடு குறைந்த அளவு உருவாகும் விளைபொருளாகும்.
3. N - ஆல்கைல் பார்மமைடிலிருந்து தயாரித்தல் பிரிடீனில் உள்ள POCI3 உடன் வினை
• இவைகள் நிறமற்றவை, விரும்பத்தகாத மணமுடைய ஆவியாகும் நீர்மங்கள். மேலும் சயனைடுகளைக் காட்டிலும் அதிக நச்சுத் தன்மையுடையவை.
• நீரில் குறைந்த அளவே கரைகின்றன ஆனால் கரிமக் கரைப்பான்களில் நன்கு கரைகின்றன.
• ஆல்கைல் சயனைடுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவான முனைவுத் தன்மை உடையவை. எனவே சயனைடுகளைக் காட்டிலும் இவைகளின் கொதிநிலை மற்றும் உருகுநிலை குறைவு.
1. நீராற்பகுப்பு
ஆல்கைல் சயனைடுகள் காரங்களால் நீராற்பகுப்பு அடைவதில்லை. எனினும் நீர்த்த கனிம அமிலங்களால் நீராற் பகுப்படைந்து ஓரிணைய அமீன்கள் மற்றும் பார்மிக் அமிலத்தைத் தருகிறது.
2. ஒடுக்கம்
வினைவேக மாற்றி அல்லது பிறவி நிலை ஹைட்ரஜனால் ஒடுக்கமடையச் செய்யும் போது, இவைகள் ஈரிணைய அமீன்களைத் தருகின்றன.
3. மாற்றியமாதல்
ஆல்கைல் ஐசோசயனைடுகளை 250°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது, அவைகள் அதிக நிலைப்புத்தன்மையுடைய மாற்றிய சயனைடுகளைத் தருகின்றன.
4. சேர்க்கை வினை
ஆல்கைல் ஐசோசயனைடுகள், ஹேலஜன், சல்பர் மற்றும் ஆக்சிஜனுடன் சேர்க்கை வினை புரிந்து சேர்க்கை சேர்மங்களை உருவாக்குகின்றன.