பெயரிடுதல், தயாரிக்கும் முறைகள், இயற்பண்புகள் மற்றும் வேதிப் பண்புகள் - சயனைடுகள் | 12th Chemistry : UNIT 13 : Organic Nitrogen Compounds
சயனைடுகள்
அறிமுகம்
இவைகள் ஹைட்ரோசயனிக் அமிலத்தின் (HCN) பெறுதிகளாகும். மேலும் பின்வரும் இரு இயங்கு சமநிலை மாற்றியங்களில் காணப்படுகிறது.
இரு வகையான ஆல்கைல் பெறுதிகளை உருவாக்கலாம். ஹைட்ரஜன் சயனைடில் உள்ள H- அணுவை ஆல்கைல் தொகுதியால் பதிலீடு செய்வதால் உருவாவது ஆல்கைல் சயனைடுகள் (R-C = N). என அறியப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் ஐசோ சயனைடில் உள்ள H - அணுவானது பதிலீடு செய்யப்படின் உருவாவது ஆல்கைல் ஐசோசயனைடுகள் (R-N C) எனப்படுகின்றன.
IUPAC பெயரிடும் முறையில், ஆல்கைல் சயனைடுகள் ஆல்கேன் நைட்ரைல்கள் எனவும் அரைல் சயனைடுகள் அரீன் கார்போநைட்ரைல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
அட்டவணை : சயனைடுகளுக்கு பெயரிடுதல்
1. ஆல்கைல் ஹாலைடுகளிலிருந்து பெறுதல்
ஆல்கைல் ஹாலைடுகளை NaCN (அல்லது) KCN கரைசலுடன் வினைபடுத்தும் போது, ஆல்கைல் சயனைடுகள் உருவாகின்றன. இவ்வினையில் ஒரு புதிய கார்பன்- கார்பன் பிணைப்பு உருவாகிறது.
எடுத்துக்காட்டு
KCN + CH3CH2 - Br → CH3CH2 - CN + KBr
எத்தில் புரோமைடு புரப்பேன் நைட்ரைல்
இம்முறையில் அரைல்சயனைடை தயாரிக்க இயலாது. கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைகளில் அவைகளின் குறைவான வினைபுரியும் தன்மையே இதற்கு காரணமாகும். அரைல் சயனைடுகள் சான்ட்மேயர் வினை மூலம் தயாரிக்கப்படுகின்றன.
2. ஓரிணைய அமைடுகள் மற்றும் ஆல்டாக்சைம்களை P2O5 உடன் சேர்த்து நீரகற்றுதல்.
3. P2O5 உடன் அம்மோனியம் கார்பாக்சிலேட் நீரகற்றம்
ஆல்கைல் சயனைடுகளை அதிக அளவில் தயாரிக்க இம்முறை பயன்படுகிறது.
4. கிரிக்னார்டு வினைபொருளிலிருந்து பெறுதல்
மெத்தில் மெக்னீசியம் புரோமைடை சயனோஜன் குளோரைடுடன் (Cl - CN) வினைபடுத்தும் போது ஈத்தேன் நைட்ரைல் உருவாகிறது.
பதினான்கு கார்பன் அணுக்கள் வரை கொண்டுள்ள சேர்மங்கள் நிறமற்ற குறிப்பிடத்தகுந்த இனிப்பு மணமுடைய திரவங்களாகும். உயர் கார்பன் அணுக்களைக் கொண்டுள்ள சேர்மங்கள் படிக்க திண்மங்களாகும். இவைகள் நீரில் ஓரளவிற்கு கரைகின்றன. ஆனால் கரிம கரைப்பான்களில் நன்கு கரைகின்றன. இவைகள் நச்சுத் தன்மையுடையது.
ஒத்த அசிட்டிலீன்களுடன் ஒப்பிடும் போது, இவைகள் அதிக கொதிநிலையைக் கொண்டுள்ளன. ஏனெனில் இவைகள் அதிக இருமுனை திருப்புத்திறன் மதிப்பைக் கொண்டுள்ளன.
1. நீராற்பகுப்பு
காரம் அல்லது நீர்த்த கரிம அமிலங்களுடன் வெப்பப்படுத்தும் போது, சயனைடுகள் நீராற்பகுப்படைந்து கார்பாக்சிலிக் அமிலங்களைத் தருகின்றன.
எடுத்துக்காட்டு
2. ஒடுக்கம்
LiAIH4 அல்லது Ni/H2 கொண்டு ஆல்கைல் சயனைடுகளை ஒடுக்கமடையச் செய்யும் போது ஓரிணைய அமீன்கள் உருவாகின்றன.
3. குறுக்கவினை
அ. தோர்ப் (Thorpe) நைட்ரைல் குறுக்க வினை
α-H அணுவைக் கொண்டுள்ள இரு மூலக்கூறு ஆல்கைல் நைட்ரைல்கள் சோடியம் / ஈதர் முன்னிலையில் சுய குறுக்கமடைந்து இமினோ நைட்ரைலைத் தருகின்றது.
ஆ. α ஹைட்ரஜனைக் கொண்டுள்ள நைட்ரைல்கள் எஸ்டர்களுடன் ஈதரில் உள்ள சோடமைடு முன்னிலையில் குறுக்க வினைக்கு உட்பட்டு கீட்டோநைட்ரைல்களைத் தருகின்றது. இவ்வினை லெவைன்மற்றும் ஹௌசர் "LevineandHauser"அசிட்டைலேற்றவினை என அழைக்கப்படுகிறது. ஈத்தாக்சி தொகுதியானது (OC2H5) மீத்தைல் நைட்ரைல் (-CH2CN) தொகுதியால் பதிலீடு செய்யப்படுதலை இவ்வினை உள்ளடக்கியது.
மேலும் இவ்வினை சயனோ மெத்திலேற்றவினை என்றழைக்கப்படுகிறது.