வேதியியல் - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் | 12th Chemistry : UNIT 13 : Organic Nitrogen Compounds
அலகு 13
கரிம நைட்ரஜன் சேர்மங்கள்
டொனால்ட் ஜேமஸ் கிராம்
டொனால்ட் ஜேம்ஸ் கிராம் என்பார் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு வேதியியல் அறிஞர் ஆவர். இவர் அதிக தெளிவுத் திறனும் செயல் இடைவினைத்திறனும் கொண்ட மூலக்கூறுகளின் வடிவங்களைக் கண்டறிதலுக்காக 1987 ஆம் ஆண்டிற்காக வேதியியல் நோபல் பரிசினை ஜேன்மேரி லென் மற்றும் சார்லஸ் J பெடர்சன் ஆகியோருடன் இணைந்து பெற்றார். இவர்கள் வேதியியலின் வேதிவினைகளின் கண்டறிந்தனர். கிராம் பெடர்சென்னுடன் இணைந்து கிரிட ஈத்தர்களை தகர்த்து தொகுத்தார். இவை இருபரிமாண கரிமச் சேர்மங்கள் மேலும் சில உலோக தனிமங்களுடன் அறிந்து தெரிவு செய்யும் திறனுயுடைய மூலக்கூறுகளாகும். மேலும் இவர் முப்பரிமாண வேதியியலிலும் ஆராய்ச்சி செய்தார். சீர்மையற்ற கார்பன் அணு தூண்டுதலின் விதி இவர் பெயரால் அழைக்கப்படுகின்றது.
கற்றலின் நோக்கங்கள் :
இப்பாடப்பகுதியை கற்றறிந்த பின் மாணவர்கள்,
• கரிம நைட்ரஜன் சேர்மங்களில் காணப்படும் மாற்றியத்தினை புரிந்துக் கொள்ளுதல்
• நைட்ரோ சேர்மங்களின் தயாரித்தல் மற்றும் பண்புகளை விவரித்தல்
• அமீன்களை ஓரிணைய, ஈரிணைய மற்றும் மூவிணைய அமீன்கள் என வகைப்படுத்துதல்
• அமீன்கள் தயாரிக்கும் முறைகளை விவரித்தல்
• ஓரிணைய, ஈரிணைய மற்றும் மூவிணைய ஆமீன்களை வேறுபடுத்தி அறிதல்
• டைசோனியம் உப்புகளை தயாரிக்கும் முறைகளை விவரித்தல்
• சயனைடுகளின் தயாரித்தல் மற்றும் பண்புகளை விளக்குதல்
பாட அறிமுகம்:
நைட்ரஜனைக் கொண்டுள்ள கரிமச் சேர்மங்கள் நம் வாழ்வில் முக்கியமானவையாகும். எடுத்துக்காட்டாக அம்மோனியாவின் கரிம பெறுதியான அமீன்கள் உயிர் ஒழுங்காற்றும் செயல்கள், நரம்புத்திசு தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகின்றது. விட்டமின் B, பிரிடாக்சின் ஆனது ஒரு கரிம நைட்ரஜன் சேர்மமாகும். இது நரம்புகள், தோல் மற்றும் இரத்த திசுக்கள் நல்முறையில் இருப்பதற்கு தேவைப்படுகிறது. தாவரங்கள் அல்கலாய்டுகள் மற்றும் உயிரியல் செயல் திறன் மிக்க அமீன்களை உருவாக்குவதன் மூலம் மற்ற பிறவிலங்குகள் மற்றும் பூச்சிகள் தங்களை உண்ணாமல் தற்காத்துக் கொள்கின்றன. கரிம தொகுப்பு வேதியியலில் டைய சோனியம் உப்புக்கள் மிக முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் மருந்துகள், சாயங்கள், எரிபொருட்கள், பலபடிகள், செயற்கை இரப்பர்கள் போன்ற பல்வேறு சேர்மங்களின் முக்கியப் பகுதிப்பொருட்களாக நைட்ரஜன் சேர்மங்கள் காணப்படுகின்றன.
இப்பாடப்பகுதியில், நைட்ரோசேர்மங்கள் மற்றும் அமீன்களின் தயாரித்தல், பண்புகள் மற்றும் பயன்களை நாம் கற்றறிவோம்.