இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் | வரலாறு - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை
பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
• 1929 இல் வியட்நாம் வீரர்கள்
ராணுவப் புரட்சி செய்தனர்.
• பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியிலும்
தோல்வி அடைந்தது.
• இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும்
விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.
• இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளை பயங்கரவாதம்
என்பது அரங்கேறியது.
• புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
2. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம்
குறித்து விவாதிக்கவும்.
• இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும்
1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாயின.
• இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து
பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக் கொண்டன.
3. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள்
யாவை?
• 1922 அக்டோபரில் முசோலினி பாசிஸ்டுகளின்
ரோமாபுரியை நோக்கிய மாபெரும் அணிவகுப்பு ஒன்றை நடத்தினார்.
• முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் முசோலினியை
ஆட்சியமைக்க வரவேற்றார்.
4. 1884-85 இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக்
குறிப்பிடுக.
• காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு
மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
• ஆனால் ஆங்கிலேயருக்கும், தென்னாப்பிரிக்க
போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர் இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.
5. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத்
தாக்கத்தை ஏற்படுத்தியது?
• பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும்,
உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
• எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை
பாதியாகக் குறைந்தது.
6. “டாலர்
ஏகாதிபத்தியம்” - தெளிவுபட விளக்குக.
இச்சொல் தொலைதூர நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின்
மீது ஆதிக்கம் செலுத்தவும் தக்கவைத்துக் கொள்ளவும் அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையாகும்.