வரலாறு - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars
இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• முதல் உலகப்போருக்குப் பிந்தைய நிகழ்வுகள்
பொருளாதாரப் பெருமந்தத்திற்கு இட்டுச் சென்றது.
• தோல்வியடைந்த
நாடுகளின் மீது திணிக்கப்பட்ட, நீதிக்குப்புறம்பான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்
சரத்துக்கள். இத்தாலியில் முசோலினியின் தலைமையிலும், ஜெர்மனியில் ஹிட்லரின்
தலைமையிலும் பாசிச அரசுகள் எழுச்சி பெறுதல்
• காலனிகளாக்கப்பட்ட
உலகில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்களும், காலனிய நீக்கச்
செயல்பாடுகளும், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளாக
தென்கிழக்காசியாவில் இந்தோ-பிரான்சும்,
தெற்காசியாவில் இந்தியாவும்
• ஆப்பிரிக்காவில்
ஐரோப்பியக்காலனிகள் உருவாக்கப்படுதல். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில்
இங்கிலாந்து காலனிகளை ஏற்படுத்துதல்
• தென்
அமெரிக்காவில் விடுதலைப்போராட்டங்களும் அரசியல் வளர்ச்சிகளும்
முதல் உலகப்போர் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை அடித்தளமாகக் கொண்ட உலக முதலாளித்துவ முறையைத் தகர்த்தது. இப்போரினால் ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியாகவும் நிதிசார்ந்த வகையிலும் கவலைக்குரிய அளவிற்குத் தளர்வடைந்து வலிமை குன்றின. தொழிலாளர்களுக்கும், அரசைக் கட்டுப்படுத்திய ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளும் தீவிரமடைந்தன. இதன் விளைவாக இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிசம் எழுச்சி பெற்றது. போரினால் காலனியாதிக்க சக்திகள் வலிமை குன்றியதால் காலனிய எதிர்ப்பியக்கங்கள் தீவிரமடைந்தன.
இதற்கு முந்தைய பாடத்தில் நாம் கண்டவாறு மேலை உலகில் நிலவிய சிக்கல்கள் முதல் உலகப்போர் வெடிப்பதற்கு இட்டுச்சென்றது. தற்போது நாம் முதல் உலகப்போர் முடிந்த பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் வளர்ச்சிகளை நோக்கி கவனத்தைத் திருப்புவோம்.