இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் | வரலாறு - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars
VI. விரிவாக விடையளிக்கவும்.
1. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக்
கண்டறியவும்.
• 1919ஆம் ஆண்டில், ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில்
சந்தித்து தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி சுருக்கமாக நாசி கட்சியை நிறுவியது.
• ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
• முதல் உலகப்போரின்போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
• அவரின் ஆற்றல் மிக்க உரை வீரர்களைத் தட்டி எழுப்பியது.
1923இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சியை மேற்கொண்டார்.
• மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர்
மேற்கொண்ட தேசியப் புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது. சிறையில்
இருந்தபோது தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின்காம்ப்
(எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
• நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்டுகள்
6,000,000 வாக்குகளைப் பெற்றனர்.
• முதலாளிகள், சொத்து உரிமையாளர்கள்
நாசிசத்தை ஆதரிக்க தொடங்கினர்.
• இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஹிட்லர் தவறான வழியில் அதிகாரத்தைக்
கைப்பற்றினார்.
2. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில்
(1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன
என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.
மாகாணங்களில் இரட்டையாட்சி:
• இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடானது
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1905-இல் சுதேசி
இயக்கத்தோடு தொடங்கியது.
• 1919-இல் இந்திய அரசுச்சட்டம்
இரட்டையாட்சி முறையை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவைத் தொழில்மயமாக்குவதில் நடவடிக்கைக் குறைபாடுகள்:
• ஆங்கில காலனியாதிக்க கொள்கையில் மாற்றம் இல்லை எனினும்
தொழில் சார்ந்த நுட்பங்கள் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு கிட்டியது.
• புதிய துறைகள் தொடர்பாக முன்னோடித் தொழில் கூடங்களை
அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
• ஆனால் ஆங்கிலேய நிறுவனங்கள்
அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதார பெருமந்தத்தின் போது இந்தியா:
• 1929 ஆம் ஆண்டு பொருளாதாரப் பெருமந்தம்
ஆங்கில வணிக நடவடிக்கைக்கு பெரும் சேதத்தை உண்டு பண்ணியது.
• பெரும் இழப்பை சரிசெய்ய புதிய வரிகள் விதிக்கப்பட்டன.
இதனை எதிர்த்து போராட்டங்களும் வெடித்தன.
• வரவு-செலவுக் கணக்குகளை சமன்படுத்தும்
கொள்கையை கட்டாயப்படுத்த இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்தியத்
தாக்கம்:
• பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும்,
உள்நாட்டு உற்பத்தி தொழிலுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
• எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை
பாதியாகக் குறைந்தது.
• இந்திய விவசாயிகளும், பொருள்
உற்பத்தியாளர்களும் உயிர் பிழைப்பதற்காக தங்களிடம் இருந்த தங்கம் வெள்ளி ஆகியவற்றை
விற்கும் நிலை ஏற்பட்டது.
1935 இந்திய அரசுச் சட்டம்:
• 1935 இந்திய அரசுச் சட்டம்.
இச்சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும்
அறிமுகம் செய்தது.
• இச்சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய
தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.
3. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
• தென் ஆப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள்
செயல்பட்டன. அவை ஆங்கிலேயர் அதிகம் கொண்ட யூனியனிஸ்ட் கட்சி,
போயர்களை பெரும்பான்மை கொண்ட தென் ஆப்பிரிக்க கட்சி.
• இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை நடத்தினர்.
• போராடும் குணம் கொண்ட ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின்
தலைமையில் தேசியக்கட்சியை தொடங்கினர்.
• 1920-ஆம் ஆண்டு தேர்தலில் தேசியக்கட்சி
44 இடங்களையும் தென்னாப்பிரிக்க ஸ்மட்ஸ் என்பாரின் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றது.
• இத்தருவாயில் ஆங்கிலேயர் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி
தென்னாப்பிரிக்க கட்சியுடன் இணைந்தது.
• போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்க நேர்களின் கட்டுப்பாட்டிலிருந்த
தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றார்.
VII. செயல்பாடுகள்
1. 1929 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தையின்
வீழ்ச்சி எவ்வாறு அமெரிக்காவின் ஒவ்வொரு துறையையும்
ஒவ்வொரு மக்கள் பிரிவினரையும் பாதித்தது என்பதைக் குறித்து ஒவ்வொரு மாணவரையும் ஒரு
ஒப்படைப்பு எழுதக் கூறலாம்.
பாதிக்கப்பட்ட துறைகள்:
• பங்கு வணிகத் துறை (ஊக வணிகம்)
• கார் தொழிற்சாலைகள்
• வேளாண் துறை
• ரியல் எஸ்டேட் துறை
• வங்கித் துறை
• நுகர்வு கலாச்சாரத்துறை
பாதிக்கப்பட்ட பிரிவினர்:
• பங்குகளில் முதலீடு செய்தவர்கள்
• தொழிற்சாலை பணியாளர்கள்
• வங்கிகளில் முதலீடு செய்தவர்கள்
• புதிய பொருட்கள் நுகர்வோர்கள்
• வேளாண் விவசாயிகள்
• வங்கிப் பணியாளர்கள்
2. வியட்நாம் போர் குறித்து ஒரு குழுச் செயல்பாட்டு முறை
விரும்பத்தக்கதாகும். வியட்நாம் மீது அமெரிக்காவின் வான்வெளித்
தாக்குகதல்கள் வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த எதிர்த்தாக்குதல் ஆகியவற்றைச் சித்தரிக்கும்
படங்களைச் சேகரித்து ஒரு செருகேடு (album) தயார் செய்யலாம்.
வகுப்பறை மாணவர் செயல்பாடுகள்.