மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 01:32 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

VII. விரிவான விடையளி


1. மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

விடை:

புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகை பரவல் ஆகும்.

உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.

. இயற்கை காரணிகள் :

வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

.வரலாற்றுக் காரணிகள் :

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள்,போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.

. பொருளாதாரக காரணிகள்

கல்விக்கூடங்கள் வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுதலுக்கான பொருளாதாரக் காரணிகள் ஆகும்.

 

2. கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.

விடை:

. கிராமக் குடியிருப்புகள் :

முதன்மை தொழில்களான வேளாண்மை வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.

கிராமக்குடியிருப்பு வகைகள் : 

செவ்வக வடிவக் குடியிருப்புகள் :

சமவெளிப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

நேர்க்கோட்டுக் குடியிருப்புகள் :

இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றுங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

வட்டவடிவக் குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :

இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :

நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

முக்கோண வடிவக் குடியிருப்புகள் :

ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

Tags : Man and Environment | Geography | Social Science மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Man and Environment : Answer in a paragraph Man and Environment | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : விரிவான விடையளி - மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்