Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுற்றுச் சூழல் பிரச்சனைகள் (Environmental Issues)
   Posted On :  08.09.2023 02:36 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

சுற்றுச் சூழல் பிரச்சனைகள் (Environmental Issues)

சில சுற்றுச் சுழல் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிவோம். ● காடுகளை அழித்தல் (Deforestation) ● காற்று நிலம், நீர், ஒலி, ஒளி போன்றவை மாசடைதல் (Pollution) ● நகரமயமாதல் (Urbanisation) ● நீர்ம விசையியல் முறிவு (Fracking) ● கழிவு அகற்றுதல் (Waste disposal) மற்றும் காடுகள் அழிதல்

சுற்றுச் சூழல் பிரச்சனைகள் (Environmental Issues)

உயிரினங்கள் வாழ்வதற்குத் துணைபுரியும் அடிப்படை அமைப்பு சுற்றுச் சூழலாகும். இது உயிரினங்களுக்கு காற்று, நீர், உணவு மற்றும் நிலம் ஆகியவற்றை அளிக்கிறது. ஆனால் மனிதனின் தீவிர தொழில்மயமாக்கலால் சுற்றுசூழல் வரிதும் பாதிக்கப்படுகிறது. சில சுற்றுச் சுழல் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிவோம்.

காடுகளை அழித்தல் (Deforestation)

காற்று நிலம், நீர், ஒலி, ஒளி போன்றவை மாசடைதல் (Pollution)

நகரமயமாதல் (Urbanisation)

நீர்ம விசையியல் முறிவு (Fracking)

 கழிவு அகற்றுதல் (Waste disposal) மற்றும் காடுகள் அழிதல் பற்றி இப்பகுதியில் காண்போம்

 

காடுகளை அழித்தல் (Deforestation)

காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காகக் காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டியெடுத்து நிலத்தைப் பதப்படுத்திப் பயன்படுத்துவதாகும்.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் (Effects of Deforestation)

காடுகள் அழிக்கப்படுவதால் வெள்ளம் மற்றும் வரட்சி, மண் வளம் இழத்தல், காற்று மாசடைதல், உயிரினங்கள் அழிதல், உலகம் வெப்பமயமாதல், பாலை வனங்கள் விரிவடைதல், நீர்வளம் குறைதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயருதல் மற்றும் ஓசோன் படலத்திலுள்ள ஓசோன் செறிவு குறைதல் போன்ற பல விளைவுகள் ஏற்படுகின்றன.

உலகச் சுற்றுச்சுழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடுகியி(பொ.)1992ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலுள்ள ரியோ-டி-ஜெனிரோ நகரில் கூட்டப்பட்டது. இம் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேறும் அளவைக் குறைத்து உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான அனைத்துக் காரணிகளையும் தவிர்க்கவேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

 

காடுகளைப் பாதுகாத்தல் (Conservation of Forests)

i) மரம் வெட்டுதலை முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.

(ii) தொடர் கண்காணிப்பு மூலமும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்த்து காடுகளைப் பாதுகாக்கலாம்.

(iii) வனவளங்களின் பயன்பாடு: நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சுவாசிக்கும் காற்று முதல் பயன்படுத்தும் மரக் கட்டைகள் வரை அனைத்திற்கும் காடுகளைச் சார்ந்திருக்கின்றோம். இவை தவிர விலங்குகளின் வாழ்விடமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் காடுகள் உள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நமது அன்றாட வாழ்விற்கு அவசியமாகும். இதனால் வன வளத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

சமூகத்திற்கு வனப் பொருள்கள் மற்றும் அதன் பயன்களின் தேவை அதிகரித்துள்ளது. தேவையைப் பூர்த்தி செய்யும்போது காடுகளின் நலனையும் அதன் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சமநிலையைப் பாதுகாக்கக்கூடிய வகையில் வன மேலாண்மை இருந்தால்தான் அது நிலைப்படுத்தப்பட்ட வன மேலாண்மையாக இருக்கும்.

9th Social Science : Geography: Man and Environment : Environmental Issues in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : சுற்றுச் சூழல் பிரச்சனைகள் (Environmental Issues) - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்