மனிதனும் சுற்றுச் சூழலும் - மக்கள்தொகை (Population) | 9th Social Science : Geography: Man and Environment
மக்கள்தொகை (Population)
மனித இனம் அல்லாத ஓர் உலகை உன்னால் கற்பனை செய்ய முடியுமா? பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மனித இனம் மிக முக்கியமானதாகும். மக்கள்தொகை (Populous) என்ற சொல், இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பாப்புலஸ் என்றால் மக்கள் என்று பொருளாகும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள்தொகை என்கிறோம்.
மக்கள் தொகையியல்
(Demography) என்றால் என்ன?
பழங்காலத்தில் கிரேக்க மொழியில் 'Demos’ என்றால் மக்கள் என்றும் 'graphis' என்றால் கணக்கிடுதல் என்றும் பொருளகும்.
எனவே மக்கள்தொகையியல் என்பது புள்ளியியல் முறையில், மக்கள்தொகையைக் கணக்கிடுவதாகும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பையே மக்கள்தொகை வளர்ச்சி என்கிறோம். பொதுவாக மக்கள் தொகை வளர்ச்சியானதுசீராக அதிகரித்துக்கொண்டிருக்கும். ஆனால் தொழிற்புரட்சியின் போது மிக அதிகமாக அதிகரிக்க ஆரம்பித்தது
மக்கள்தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும், இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். பொதுவாக மக்கள்தொகை எப்போதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்,
ஆனால் சில சமயங்களில் மக்கள்தொகை வளர்ச்சி குறையும். குறிப்பாக பஞ்சம், நிலச்சரிவு புவி அதிர்ச்சி, ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் கழிவுகளான போர் போன்ற காரணங்களினால் மக்கள்தொகை வளர்ச்சி குறைகின்றது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு
(Census)
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்கள்தொகை பற்றிக் கணக் கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கின்றது.
இக்கணக்கெடுப்பு மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும் தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி உலகின் பல்வேறு நாடுகள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்கின்றன.
பாபிலோனில் கி.மு.
பொ
.ஆ.மு
) 3800ல் உலகின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது.
நவீன உலகில் மக்கள்தொகை கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு டென்மார்க் ஆகும்.
இந்தியாவில் கி.பி.
(பொ.ஆ)
1872 ஆம் ஆண்டில் முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1881ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் தொகை, சமூக, பொருளாதார விவரங்களை விரிவாக அளிக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றனது.
நீங்கள் மக்கள்தொகை கணக் கெடுப்புத் தகவல் குறிப்பேடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் நூலகத்தில் தேடிப்பாருங்கள்.
மக்கள்தொகையில் மாற்றம் என்பது மக்களின் எண்ணிக்கை ஓரிடத்தில் வளர்ச்சி அதிகரிப்பு அல்லது குறைவதைக் குறிப்பதாகும். இது பிறப்பு, இறப்பு மற்றும் மக்கள் இடப்பெயர்வு ஆகியவற்றினால் தீர்மானிக்கப்படுகிறது. கி.பி (பொ.ஆ) 1850ல் 500 மில்லியனாக இருந்த மக்கள்தொகை கி.பி. (பொ.ஆ) 1850ல் 1000 மில்லியனாக இருமடங்கு வளர்ச்சி கண்டது. இது கி.பி (பொது) 2025 மற்றும் கி.பி. (பொது) 2050ல் முறையே 8 பில்லியன் மற்றும் 9 பில்லியன்களாக வளர்சியடையும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு மற்றும் குடியிறக்கம் (imigiration)
காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது. இறப்பு மற்றும் குடியேற்றம் (emigration)
காரணமாக மக்கள் தொகை குறைகிறது
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள்தொகை பரவல் ஆகும்.
உலகில் எல்லா இடங்களிலும் மக்கள்தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை . அதற்கான காரணிகள் பின்வருமாறு
அ. இயற்கை காரணிகள் (Physical Factors)
இயற்கை காரணிகளான வெப்பநிலை, மழை, மண்,
நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.
ஆ. வரலாற்றுக் காரணிகள் (Historical Factors)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள்தொகை பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் கரணிகளாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
14 ஆம் நூற்றாண்டில் உங்களுக்குத் ஐரோப்பாவில் 'பிளேக்" என்ற கொள்ளை நோயினால் 30 - 60 சதவீதம் மக்கள் இறந்தனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இ. பொருளாதாரக் காரணிகள் (Economic Factors)
கல்விக்கூடங்கள் வேலைவாய்ப்புகள்,
உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுவதற்க்கு காரணமாகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இதன் மூலம் உலக மக்கள் தொகை பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட அமைப்பு இதை 1989ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம். மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்களடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்களடர்த்தி என்றும் அழைக்கிறோம். அதாவது
மக்களடர்த்தி =
மொத்த மக்கள்தொகை/ மொத்த நிலப்பரப்பு
உலக மக்கள் அடர்த்தியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
● அதிக மக்களடர்த்திப் பகுதிகள்: ஒரு சதுரகிலோ மீட்டர் நிலப்பரப்பில் 50க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதை அதிக மக்கள் அடர்த்திப் பகுதி என்கிறோம்.
(எ.கா) கிழக்கு ஆசியா,
தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வடமெரிக்காவின் கிழக்குப்பகுதி .
● மிதமான மக்களடர்த்திப் பகுதிகள். ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 10ல் இருந்து 50 பேர் வரை வசிப்பதை மிதமான மக்களடர்த்திப்பகுதி என்கிறோம். (எ.கா) மிதிவப்ப மண்டலம் பகுதியில் உள்ள அங்கோலா,
காங்கோ, நைஜீரியாமற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியா.
● குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்: ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 12க்கும் குறைவான மக்கள் வாழ்வதைக் குறைந்த மக்கள் அடர்த்திப் பகுதி என்கிறோம்.
(எ.கா) மத்திய ஆப்பிரிக்கா,
மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா
செயல்பாடு
கீழே உள்ள அட்டவணையில் தமிழ் நாட்டின் ஐந்து மிக அதிக மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மக்களடர்த்தியை கணக்கிட்டு வரிசைப்படுத்தவும்.
அதிக மக்கள்தொகை மற்றும் குறைந்த மக்கள் தொகை
அதிக மக்கள்தொகை என்பது.
ஒரு நாட்டில் மக்களின் எண்ணிக்கையைவிட வளங்களின் அளவு குறைவாக இருப்பதாகும்.
மாறாக, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தொகையும் அதிக அளவிலான வளமும் இருந்தால் அதனைக் குறைந்த மக்கள் தொகை என்கிறோம்.
உங்களுக்குத் தெரியுமா?
கி.பி (பொ.ஆ) 1952 இல் இந்திய அரசின் அதிகார பூர்வமான மக்கள்தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது போன்றதொரு கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு இந்தியா ஆகும். பல்வேறு வகையான குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.