Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities)

மனிதனும் சுற்றுச் சூழலும் - பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities) | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 02:34 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities)

பொருளதார நடவடிக்கை என்பது ஒரு பகுதியில் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் பொருள்களின் உற்பத்தி, பகிர்வு நுகர்வு மற்றும் சேவைகளைக் குறிப்பதாகும்.

பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities)

பொருளதார நடவடிக்கை என்பது ஒரு பகுதியில் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் பொருள்களின் உற்பத்தி, பகிர்வு நுகர்வு மற்றும் சேவைகளைக் குறிப்பதாகும்.

 

பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள் (Types of Economic Activities)

 முதல்நிலைத் தொழில்கள் (Primary Activities)

முதல்நிலைத் தொழில் என்பது புவியிலிருந்து மூலப்பொருட்களை பெறும் தொழில் ஆகும். இதில் உணவு சேகரித்தல் வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல், கால்நடைகளை மேய்த்தல், கனிமங்களை வெட்டி எடுத்தல் மற்றும் வேளாண்மை செய்தல் ஆகிய தொழில்கள் அடங்கும்.

இரண்டாம் நிலைத் தொழில்கள் (Secondary Activities)

இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்கள் முடிவுற்ற பொருள்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. (.கா) இரும்பு எங்கு தொழிற்சாலைகள், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள்.

 மூன்றாம் நிலைத் தொழில்கள் (Tertiary Activities)

மூன்றாம் நிலைத்தொழிலில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை . மாறாக உற்பத்திச் செயலுக்கு துணை புரிகின்றன. (.கா) போக்குவரத்து, தகவல் தொடர்பு வங்கிகள், மற்றும் சேமிப்புக் கிடங்கு வணிகம்.

நான்காம்நிலைத் தொழில்கள் (Quaternary Activities)

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளை நான்காம் நிலைத்தொழில் என்கிறோம். (.கா) ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சார்ந்த சேவைகள்.

ஐந்தாம் நிலைத் தொழில்கள் (Quinary Activities)

ஐந்தாம்நிலைத் தொழில் என்பது உருவாக்குதல் மறுகட்டமைப்பு செய்தல், பயன்பாட்டில் உள்ள பழைய கருத்துகள் மற்றும் புதிய கருத்துக்கள் விவரணம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். இதில் சமூக அல்லது பொருளாதாரத்தில் உயர்மட்ட முடிவுகள் எடுப்பதும் உள்ளடங்கும். (.கா) வணிக அமைப்புகளின் தலைமை அதிகாரிகள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளில் முடிவு எடுப்பவர்கள்

Tags : Man and Environment மனிதனும் சுற்றுச் சூழலும்.
9th Social Science : Geography: Man and Environment : Types of Economic Activities Man and Environment in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities) - மனிதனும் சுற்றுச் சூழலும் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்