Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 01:29 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

 

IV. சுருக்கமான விடையளி.


1. மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

விடை:

ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம்.

மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்களடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்களடர்த்தி என்றும் அழைக்கிறோம்.

மக்களடர்த்தி = மொத்த மக்கள் தொகை / மொத்த நிலப்பரப்பு

 

2. கொள்ளை நோய் என்றால் என்ன?

விடை:

• 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில்பிளேக்என்ற கொள்ளை நோயினால் 30 - 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.

பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒரு நோயினால் இறந்தால் அது கொள்ளை நோய் எனப்படும்

 

3. வரையறு

விடை:

) மக்கள் தொகை வளர்ச்சி

மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு

மக்கள் தொகை வளர்ச்சிஆகும்.

மக்கள் தொகை வளர்ச்சி = (பிறப்பு விகிதம் + குடியிறக்கம்) - (இறப்பு விகிதம் + குடியேற்றம்)

) மக்கள் தொகை கணக்கெடுப்பு

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும் தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, மக்கள் தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கிறது.

) வளம் குன்றா வளர்ச்சி

எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.

Tags : Man and Environment | Geography | Social Science மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Man and Environment : Answer the following in brief Man and Environment | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்