Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மனிதனும் சுற்றுச் சூழலும்

அறிமுகம் | புவியியல் - மனிதனும் சுற்றுச் சூழலும் | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 02:25 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

மனிதனும் சுற்றுச் சூழலும்

சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது ஆகும். மனிதன் தொன்றுதொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் 'சூழல்' என்று அழைக்கப்படுகிறது.

அலகு 6

மனிதனும் சுற்றுச் சூழலும்


 

கற்றல் நோக்கங்கள்

சுற்றுச்சூழல் கூறுகளை அறிதல்

 மனிதன் - சுற்றுச்சூழல் தொடர்புகளுக்கு இடையே உள்ள பல்வேறு கூறுகளைப் புரிந்து கொள்ளுதல்

பல்வேறு குடியிருப்பு வகைகளைப் பற்றி அறிதல்

 மனிதனின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை அறிதல்

மனிதனின் செயல்பாடுகள் சுற்றுச்சுழல் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை அறிதல்

 

அறிமுகம்

சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது ஆகும். மனிதன் தொன்றுதொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் 'சூழல்' என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சுழல் (Enviornment) என்ற சொல் என்விரான் (Environ) என்ற பிரஞ்சு மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புரம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.


மனிதனும் சுற்றுச்சுழலும்

ஆதிகால மனிதர்கள், தங்களது உணவு உடை மற்றும் இருப்பிடத் தேவைக்கு இயற்கையையே சார்ந்து இருந்தனர். மனிதன் தன் நிமிர்ந்த நிலை, கைகள் மற்றும் அறிவுக்கூர்மை செயல்பாடுகளால் பிற உயிரினங்களின் மீது ஆதிக்கம் செலுத்தின் உயர் நிலையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான் பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை சக்கரம், நெருப்பு கருவிகள், வேளாண் முறைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றைக் கண்டுபிடித்தான் மேலும் தனது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கினான். நவீன காலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தினால் தன் எல்லையை விரிவுபடுத்துவதற்காக தன் சுற்றுச்சுழலை மாற்றி அமைத்தான் இதன் காரணமாக இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

கி.பி. (பொ. 1972-ஆம் ஆண்டு உங்களுக்கும் - ஸ்டாக்ஹோம் மாநாட்டில்  மனிதன் சுற்றுச்சூழலைஉருவாக்கி வடிவமைக்கிறான் என அறிவிக்கப்பட்டது ரியோடி ஜெனிரோ நகரில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது (UNCED - United Nations Conference on Environment and Development)

 

சுற்றுச்சூழலின் வகைப்பாடுகள் (Cassification of Environment)

) இயற்கை சுற்றுச்சூழல்

 ) மனித சுற்றுச்சூழல்

) மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்


) இயற்கை சுற்றுச் சூழல் (Natural Environment)

சுற்றுச்சூழலின் இயற்கை கூறுகளான நிலக்கோளம், நீர்க்கோளம், வாயுக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவற்றைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். இப்படத்தில் மனிதனைப் பற்றியும் மனிதனால் உருவாக்கப்பட்ட கூறுகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

) மனித சுற்றுச்சூழல் (Human Environment)

மனித சுற்றுச்சூழல் என்பது ஒரு மனிதன், அவனது குடும்பம், தொழில் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்புகளை விளக்குவதாகும். இது மேலும், இது பல்வேறு கலாச்சாரக் கூறுகளான கல்வி, மதம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது.

) மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சுழல் (Man-made Environment)

மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சுழல் என்பது மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் தன் வாழ்க்கையை ஏதுவானதாகவும் எளிதானதாகவும் அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக கட்டடம், போக்குவரத்து பூங்கா, தொழிற்சாலை நினைவுச்சின்னம் போன்றவை இயற்கைச் மூலுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த, மனிதன் மக்கள்தொகை பரவல் வளங்களின் இருப்பு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள்தொகையின் தேவைக்கேற்ப வளங்களுக்கான மாற்று வழிமுறைகளைக் கண்டறிதல் போன்றவற்றைக் கையாண்டு வருகின்றான்.

Tags : அறிமுகம் | புவியியல்.
9th Social Science : Geography: Man and Environment : Man and environment in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : மனிதனும் சுற்றுச் சூழலும் - அறிமுகம் | புவியியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்