மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக | 9th Social Science : Geography: Man and Environment

   Posted On :  08.09.2023 01:30 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்

காரணம் கூறுக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : காரணம் கூறுக

V. காரணம் கூறுக.


1. காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.

விடை:

மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதன் மூலம்காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்து வனவளம் குறையாமல் பாதுகாக்கலாம். சில சமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன.

காடுகளில் எந்த வகை மரம் வெட்டப்பட்டதோ அதே வகை மரத்தை அதன் எண்ணிக்கை குறையாத வகையில் நட்டு வளர்த்து இருக்கின்ற காட்டு வளத்தைப் பாதுகாக்க மீள் காடாக்குதல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

 

2. அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.

விடை:

அமிலமழை நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அடங்கியது.

அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தகடை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் படிம எரிபொருள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது.

எரிக்கப்பட்ட மாசுப்பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரிய ஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு அமிலமாக மாறி, நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது.

 

3. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை ஓர் அறிவுசார் பொருளாதாரம்.

விடை:

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கை,

இதில் ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சேவைகள் அடங்கும்.

4. மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.

விடை:

மக்கள் தொகைவளர்ச்சி வேலை வாய்ப்பின்மை மாசு, குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படைக் கட்டமைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

 

5. வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் புவியைப் பாதுகாப்பதாக இருக்கிறதா?

விடை:

வளங்களைப் பாதுகாத்துதல் மற்றும் அது சார்ந்த விழிப்புணர்வு, புவியில் வாழும் உயிர்களைப் பாதுகாக்க அவசியமானது.

வளம் குன்றா வளர்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு வள இருப்பை உறுதி செய்கிறது. நிகழ் காலத் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

Tags : Man and Environment | Geography | Social Science மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography: Man and Environment : Give reasons for the following Man and Environment | Geography | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும் : காரணம் கூறுக - மனிதனும் சுற்றுச் சூழலும் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மனிதனும் சுற்றுச் சூழலும்