தேசியம் | காந்திய காலகட்டம் | சமூக அறிவியல் - தேசியம்: காந்திய காலகட்டம் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase
தேசியம்: காந்திய காலகட்டம்
நாம் கீழ்க்கண்டவைகளைப் பற்றி அறிந்து கொள்ள
• இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்திய
காலகட்டம்
• இந்தியாவில்
மக்களை ஒன்றிணைக்க அகிம்சை மற்றும் சத்தியாகிரகம் ஆகிய காந்தியக் கொள்கைகள்
பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட காலகட்டம்
• சம்பரான்
மற்றும் ரௌலட் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டங்கள்
• ஒத்துழையாமை
இயக்கம் மற்றும் அதன் வீழ்ச்சி
• தீவிரத்தன்மை
கொண்டவர்களும் தீவிர தேசியவாதப் போக்கு உடையவர்களின் தோற்றமும் விடுதலைப்
போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்கும்
• சட்டமறுப்பு
இயக்கத்தின் தொடக்கம்
• தனித்தொகுதிகள்
குறித்த சர்ச்சை மற்றும் பூனா ஒப்பந்தம் கையெழுத்திடப்படுதல்
• மாகாணங்களில்
முதலாவதாக அமைந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம்
தோன்றுவதற்கான சூழ்நிலைகள்
• இந்தியத்
துணைக்கண்டத்தை இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிவினை செய்ய வழிவகுத்த
வகுப்புவாதம்
மகாத்மா
காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின்
சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடிய பிறகு 1915
இல்
தாயகம் திரும்பினார். இந்திய அரசியலுக்கு புதிய எழுச்சியை அவர் ஏற்படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவில் அவர் ஆண்கள், பெண்கள்,
இளைஞர்கள்,
முதியோர்
என அனைவரும் பின்பற்றத்தக்க ‘சத்தியாகிரகம்’ என்ற புதிய வழிமுறையை அறிமுகம் செய்தார்.
அடித்தட்டு வறியவர்களின் மேன்மைக்காக உறுதிபூண்ட அவரால் மக்களின் நல்லெண்ணத்தை
எளிதில் பெறமுடிந்தது. இந்திய தேசிய இயக்கத்தை காந்தியடிகள் எவ்வாறு மடைமாற்றம்
பெறவைத்தார் என்பதை இந்தப் பாடத்தில் நாம் காண்போம்.