Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | குறுகிய விடை தருக.

மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  25.07.2022 01:34 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு

குறுகிய விடை தருக.

சமூக அறிவியல் : குடிமையியல் : மாநில அரசு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: குறுகிய விடை தருக.

V. குறுகிய விடை தருக.

 

1. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?

• மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர்.

• மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.

• பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்கிறார்.

•  அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது.

 

2. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?

• அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

•  அவர் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

• அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.

• அவர் இலாபந்தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

 

3. உயர் நீதிமன்றத்தின்  தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?

• சென்னை, மும்பை, கல்கத்தா நீதிமன்றங்கள், தங்களுக்கான அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

• அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களைப் பெற்றுள்ளன.

•  முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவைப் பெற்றுள்ளன.

• மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையயை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

 

4. உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?

• உயர்நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.

•  நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

 

Tags : State Government of India | Civics | Social Science மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : Answer the brief questions State Government of India | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு : குறுகிய விடை தருக. - மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு