நியமனம், அதிகாரங்கள் மற்றும் பணிகள், அமைச்சரவை, | மாநில அரசு - முதலமைச்சர் | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India
முதலமைச்சர்
அரசியலமைப்பால்
அமைக்கப்பட்ட நாடாளுமன்ற முறையில் அமைந்த அரசில், ஆளுநர், மாநிலத்தின்
பெயரளவு நிர்வாகியாகவும் முதலமைச்சர் உண்மையான நிர்வாகியாகவும் உள்ளனர். வேறு வகையில் கூற வேண்டுமாயின் ஆளுநர் என்பவர் மாநிலத்தின் அரசின் தலைவர் முதலமைச்சர்
என்பவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்.
முதலமைச்சர்
மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார். முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல.
சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ
அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம். சட்டமன்றத்தில் எப்பொழுது
அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.
சட்டமன்றத்தில் மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் போலவே முதலமைச்சரின்
பதவிக்காலமும் 5 ஆண்டுகள் ஆகும்.
•
முதலமைச்சரின்
பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
•
அமைச்சர்களுக்குத்
துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
•
தனது அமைச்சரவையை
மாற்றியமைக்கிறார்.
•
அமைச்சரவைக் கூட்டத்தைத்
தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
•
அமைச்சர்கள் அனைவரையும்
கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
கீழ்க்காணும்
அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
•
மாநில அரசு வழக்குரைஞர்
•
மாநில தேர்தல்
ஆணையர்
•
அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
•
மாநில திட்டக்குழுத்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
•
மாநில நிதிக்குழுத்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
•
சட்டமன்ற கூட்டத்தொடரை
ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
•
சட்டமன்றத்தில்
அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
•
எந்நேரத்திலும்
சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
அமைச்சரவை
மாநில சட்டமன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்பானது. அமைச்சரவைக் குழுவின் அமைச்சர்கள் அனைவரும்
சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்
அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றால் 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக
வேண்டும். சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து
நிறைவேற்றப்பட்டால் மாநில அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும்.
அரசியலமைப்பு
சட்டப்பிரிவு 163 ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்திருக்கிறது.
சட்டப்பிரிவு 163(1) இன் படி, முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி
செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.
சட்டப்பிரிவு 164(1), ஆளுநரால் முதலமைச்சர்
நியமிக்கப்படுவதைக் கூறுகிறது. முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின்
எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டை
தாண்டக்கூடாது என சட்டப்பிரிவு 164 (1A) கூறுகிறது.
•
மாநில அரசிற்கான
கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
•
சட்டமன்ற நிகழ்ச்சிகளை
முடிவு செய்து அனைத்து முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
•
நிதிக்கொள்கையைக்
கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
•
முக்கியமான துறைத்
தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
•
மற்ற மாநிலங்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
•
மாநிலத்திற்கான
செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
•
ஒரு மசோதா சட்டமன்றத்தில்
அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று
தீர்மானிக்கிறது.
•
அமைச்சரவையின்
ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
•
ஆண்டு வரவு-செலவு திட்டம்
(Budget) அமைச்சரவையால் இறுதி
செய்யப்படுகிறது.