மாநில அரசு - சட்டமன்றத்தின் செயல்பாடுகள் | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India
சட்டமன்றத்தின் செயல்பாடுகள்
சட்டமன்ற அதிகாரங்கள்
அரசியலமைப்பின்படி
மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம். பொதுப்பட்டியலிலும்
சட்டமன்றம் சட்டம் இயற்றலாம். ஆனால் அதே சட்டத்தை நடுவண் அரசு
இயற்றும் பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும். மத்திய
நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.
நிதி அதிகாரங்கள்
சட்டமன்றம்
மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும்
பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது. பண மசோதா கீழவையில்
மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி
புதிய வரிகளை விதிக்க முடியாது.
நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்
அமைச்சரவையானது
சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு
நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.