குடிமையியல் | சமூக அறிவியல் - மாநில அரசு | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  05.07.2022 11:01 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு

மாநில அரசு

இந்திய அரசியலமைப்பு நடுவண், மாநில அரசுகளுக்கான தனித்தனி நிர்வாக முறைகளைக் கொண்ட கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது. இக்கூட்டாட்சியில், தேசியத் தலைநகரான டெல்லியுடன் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன.

மாநில அரசு


கற்றலின் நோக்கங்கள்

மாநில அரசின் அமைப்புப் பற்றிய அறிவினைப்பெறுதல்

ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளைப் புரிந்துகொள்ளுதல்

மாநில சட்டமன்றம் பற்றி அறிதல்

மாநிலத்தின் நீதித்துறை மற்றும் அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளுதல்

 

அறிமுகம் 

இந்திய அரசியலமைப்பு நடுவண், மாநில அரசுகளுக்கான தனித்தனி நிர்வாக முறைகளைக் கொண்ட கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது. இக்கூட்டாட்சியில், தேசியத் தலைநகரான டெல்லியுடன் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன. நடுவண் மாநில அரசுகளுக்கான ஒரு சீரான நிர்வாக அமைப்பினை ஏற்படுத்த அரசியலமைப்பு வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் பகுதி VIஇல் 152 முதல் 237 வரையிலான சட்டப்பிரிவுகள் அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடுகிறது. நடுவண் அரசைப் போன்று மாநில அரசுகளும் நிர்வாகத்துறை, சட்டமன்றம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இயங்குகின்றன.



Tags : Civics | Social Science குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : State Government of India Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு : மாநில அரசு - குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு