Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 10:17 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. சுருக்கமாக விடையளிக்கவும்

1. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.

விடை:  

காலனியாதிக்கம்

காலனியாதிக்கம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமை கொண்டு மேலாதிக்கம் செய்வதாகும்.

காலனியாதிக்கம் என்பது மக்களை ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்வர்

ஏகாதிபத்தியம் 

ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு, வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவது 

குடியேறுதல் மூலமாகவே, மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழியாகவோ அதிகாரம் செலுத்துதல்.

 

2. ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

விடை:  

ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள்.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கென ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கியப் பங்காற்றினார்.

ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைக் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர்.

ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை.

அவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆழமாக நிலை கொண்டுவிட்ட இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.

 

3. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.

விடை:  

. முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்

. இரண்டாம் கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்.

. மூன்றாம் கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்.

 

4. கர்னல் பென்னிகுயிக்

விடை:  

கர்னல் பென்னிகுயிக் :

பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளர், குடிமைப்பணியாளர், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவார்.

மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்ப முடிவு செய்தார். கிழக்கு நோக்கித் திருப்பினாள் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.

பென்னி குயிக்கும் மற்றும் ஆங்கிலேய பொறியாளர்களும் அணையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன.

ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு 1895ல் அணையைக் கட்டி முடித்தார்.

 

5. தாயகக் கட்டணங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.

விடை:  

தாயகக் கட்டணங்கள் : என்னும் பெயரால் பெருமளவு பணத்தை இங்கிலாந்திற்கு அனுப்பியது. தாயகக் கட்டணங்கள் - கம்பெனி பங்குதாரர்களுக்கு சேரவேண்டிய லாபத்தில் பங்கு.

வாங்கிய கடனின் மீதான வட்டி

ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு

அதிகாரிகளுக்கான ஓய்வூதியம்

லண்டனின் இந்திய அலுவலகத்திற்கான செலவுகள்.

போக்குவரத்து செலவு

(காலப்போக்கில் தாயகக் கட்டணங்கள் ஆண்டொன்றுக்கு 16 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது. இது தவிர தனி நபர்கள் அனுப்பிய பணம் 10 மில்லியன் பவுண்டுகள்)

Tags : Colonialism in Asia and Africa | History | Social Science ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : Answer the following briefly Colonialism in Asia and Africa | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்