ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு - மீள்பார்வை | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 09:34 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

மீள்பார்வை

மலேயா தீபகற்பத்தில் காலனிகளை உருவாக்குவதில் போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரிடையே நிலவிய போட்டி விவரிக்கப்பட்டுள்ளது

மீள்பார்வை

மலேயா தீபகற்பத்தில் காலனிகளை உருவாக்குவதில் போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரிடையே நிலவிய போட்டி விவரிக்கப்பட்டுள்ளது

ஜகார்த்தாவில் தங்கள் தளத்தை ஏற்படுத்திக்கொண்ட டச்சுக்காரர் படிப்படியாக ஜாவா, சுமத்ரா ஆகிய பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது விவாதிக்கப்பட்டுள்ளதுபினாங்கிலிருந்து ஆங்கிலேயர் தங்கள் தளத்தை ஐக்கிய மலாய் நாடுகள், நீரிணைப் பகுதி, பர்மா ஆகியவற்றை வசப்படுத்துவதற்குக் கொண்டுசென்றது விவரிக்கப்பட்டுள்ளது

முதலில் ஸ்பானியர் வசமிருந்தபிலிப்பைன்ஸ் அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் முதலில் நேட்டால், கேப் காலனி ஆகியவற்றையும் பின்னர் கோல்டு கோஸ்டின் கடற்கரை நாடுகளைக் கைப்பற்றியதும், டச்சுக்காரர் போயர் நாடுகளான டிரான்ஸ்வால், ஆரஞ்சு சுதந்திர நாட்டைக் கைப்பற்றியதும் விளக்கப்பட்டுள்ளன

ஜோகன்னஸ்பர்க்கில் நிலைகொண்ட ஆங்கிலேயர் போயர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் போயர் போர்கள் ஏற்பட்டது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பிச்சுவானாலாந்தில் (போட்ஸ்வானா) ஆங்கிலேயர் குடியேற்றமொன்றை நிறுவியதும் பின்னர் ஆப்பிரிக்கரின் எதிர்ப்பை நசுக்கி அப்பகுதியைக் கைப்பற்றி ரொடீசியா என பெயரிட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளன

மேற்கு ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் முதலில் செனகலையும் பின்னர் கினி, ஐவரி கோஸ்ட், தகோமே (தற்போது ஆப்பிரிக்க யூனியனிலுள்ள பெனின் நாட்டின் ஒரு பகுதி) ஆகியவற்றைக் கைப்பற்றியதும், காங்கோ பெல்ஜியருக்குத் தரப்பட்டு லியோபோல்டால் ஆளப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளன

ஆங்கிலேயர் கென்யா, உகாண்டா, ஜான்ஜி பார் ஆகியவற்றையும் ஜெர்மானியர் கிழக்கு ஆப்பிரிக்காவையும் போர்த்துகீசியர் - அங்கோலா, மொசாம்பிக், போர்த்துக்கீசிய கினி ஆகியவற்றையும் காலனிகளாக்கியது எடுத்துரைக்கப்பட்டுள்ளன

ஆங்கிலேய ஆட்சி உருவாக்கப்பட்டதன் விளைவாக மூன்று வெவ்வேறு அடுத்தடுத்தக் கட்டங்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு காலனிமயமாக்கப்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயரது காலனியாதிக்கம் இந்திய வேளாண்மையைக் கடுமையாகத் தாக்கியதால் இந்திய விவசாயிகள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டதும், மேலும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் அவர்கள் ஒப்பந்தக் கூலிகளாக ஆங்கிலப் பேரரசின் கடல்கடந்த காலனிகளுக்குக் குடிபெயரும் கட்டாயம் ஏற்பட்டதும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன

Tags : Colonialism in Asia and Africa | History ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : Summary Colonialism in Asia and Africa | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : மீள்பார்வை - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்