Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

வரலாறு | அறிமுகம் - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 09:28 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

காலனியாதிக்கம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமைபடுத்தி மேலாதிக்கம் செய்வதாகும். காலனியாதிக்கத்தைப் போல் ஏகாதிபத்தியமும் தன்னைச் சார்ந்திருக்கும் பகுதியின் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துவதாகும். ஸ்டான்போர்டு தத்துவக் கலைக்களஞ்சியம் இவ்விரண்டையும் பின்வருமாறு வேறுபடுத்துகிறது:

பாடம் 11

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்


 

கற்றல் நோக்கங்கள்

தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகளை அறிதல்

போர்த்துகீசியர், ஸ்பானியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், அமெரிக்கர் ஆகியோரால் காலனிகள் உருவாக்கப்படுதல்

 மலேயா தீபகற்பம், இந்தோனேசியா, பர்மா (மியான்மர்), இந்தோ -சீனா, பிலிப்பைன்ஸ் ஆகியவை மீது காலனியாதிக்கம் ஏற்படுத்திய தாக்கம்

ஆப்பிரிக்கா ஆக்கிரமிக்கப்படுதல்; டச்சுக்காரர், ஆங்கிலேயர், போர்த்துகீசியர், ஜெர்மானியர், பெல்ஜியர் ஆகியோரின் காலனியாதிக்க ஆட்சி

இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கம்; இந்தியப் பொருளாதாரத்தை காலனியமயமாக்குதல்

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம்

 

அறிமுகம்

காலனியாதிக்கம் என்பது ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமைபடுத்தி மேலாதிக்கம் செய்வதாகும். காலனியாதிக்கத்தைப் போல் ஏகாதிபத்தியமும் தன்னைச் சார்ந்திருக்கும் பகுதியின் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துவதாகும். ஸ்டான்போர்டு தத்துவக் கலைக்களஞ்சியம் இவ்விரண்டையும் பின்வருமாறு வேறுபடுத்துகிறது: காலனி என்னும் சொல் 'கலோனஸ்' என்னும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் விவசாயி என்பதாகும். காலனியாதிக்கம் என்பது மக்களை ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்வர். ஆனால் சொந்த நாட்டின் மீதே அரசியல் விசுவாசம் கொண்டிருப்பர் என்பதை இவ்வேர்ச்சொல் சுட்டுகிறது. மாறாக ஏகாதிபத்தியம் (இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள்) என்பது ஒரு நாடு, குடியேறுதல் மூலமாகவோ இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும்.

உலக வரலாற்றில், நவீன ஐரோப்பாவைப் போல வேறு எந்தக் கண்டமும் பல காலனிகளைப் பெற்றிருந்ததில்லை; அவ்வாறு உலகின் பல பகுதிகளுக்குச் செல்ல முடிந்ததை நாகரிகத்தைப் பரப்பும் செயல் என நியாயப்படுத்தியதுமில்லை . நடைமுறையில் மேலைநாடுகள் அல்லாத உலகம் முழுவதும் ஏதேனும் ஓர் ஐரோப்பிய சக்தியின் கீழ் நான்கு நூற்றாண்டுகள் இருந்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின் காலனியாதிக்கம் நீக்கப்படும்வரை இந்தநிலை நீடித்துள்ளது.

இப்பாடத்தில் தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகியவை ஐரோப்பிய சக்திகளால் காலனிகள் ஆக்கப்பட்டதை விவாதிக்க உள்ளோம்.

Tags : History வரலாறு | அறிமுகம்.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : Colonialism in Asia and Africa History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் - வரலாறு | அறிமுகம் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்