Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 10:16 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வரலாறு

அலகு 11

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்யவும் பிரான்ஸிஸ் லைட் .......... பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

) நறுமணத் தீவுகள்

) ஜாவா தீவு

) பினாங்குத் தீவு

) மலாக்கா

விடை:

) பினாங்குத் தீவு


2. 1896 இல் ........... நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

) நான்கு

) ஐந்து

) மூன்று

) ஆறு

விடை:  

) நான்கு


3. இந்தோ - சீனாவில் ......... மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.

) ஆனம்

) டோங்கிங்

) கம்போடியா

) கொச்சின் - சீனா

விடை:  

) கொச்சின் - சீனா


4. .......... பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ் பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.

) டிரான்ஸ்வால்

) ஆரஞ்சு சுதந்திர நாடு

) கேப் காலனி

) ரொடீஷியா

விடை:  

) டிரான்ஸ்வால்


5. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்...........

) போர்த்துகீசியர்

) பிரெஞ்சுக்காரர்

) டேனிஷார்

 ) டச்சுக்காரர்

விடை:

) போர்த்துகீசியர்


6. எத்தியோப்பியா இத்தாலியை .......... போரில் தோற்கடித்தது.

) அடோவா

) டஹோமி

) டோங்கிங்

) டிரான்ஸ்வால்

விடை:  

) அடோவா


7. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை .......

) ஒப்பந்தத் தொழிலாளர் முறை

) அடிமைத்தனம்

) கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

) கொத்தடிமை

விடை:  

) கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

1. .............. மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.

விடை:

பெர்லின் குடியேற்ற

2. வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு ........ என்றழைக்கப்படுகிறது.

விடை:  

நிரந்தர நிலவரித்திட்டம்

3. ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது .............. ஆகும்.

விடை:  

நிலவரி

4. தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் ............ வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.

விடை:  

நாட்டுக் கோட்டைச் செட்டியார்

 

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

1. i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு  தெரியாமல் இருந்தது.

ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.

iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.

iv) ஒடிசா பஞ்சம் 1878-76 இல் நடைபெற்றது.

) i) சரி

) ii) சரி

) ii) மற்றும் iii) சரி ) iv) சரி

விடை:  

) i) சரி


2. i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைப்பற்றினர்.

ii) மலாக்காவைக் கைப்பற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.

iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது. iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.

) i) சரி

) i) மற்றும் ii) சரி

) iii) சரி ) iv) சரி

விடை:  

) iii) சரி


3. கூற்று : சென்னை மகாணத்தில் 1876 - 1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.

காரணம் : காலனியரசு உணவு தானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

விடை:  

) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்


4. கூற்று : பெர்லின் மாநாடு இரண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.

காரணம் : பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.

) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று தவறு, காரணம் சரி

விடை:  

) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 

IV. பொருத்துக

1. லியோபோல்டு - எத்தியோப்பியா 

2. மெனிலிக் - வியட்நாம்

3. சிசல் ரோடெஸ் - பெல்ஜியம்

4. வங்காளப் பஞ்சம் - கேப் காலனி 

5. போ தெய் - 1770

விடை:  

1. லியோபோல்டு - பெல்ஜியம் 

2. மெனிலிக் - எத்தியோப்பியா

3. சிசல் ரோடெஸ் - கேப் காலனி 

4. வங்காளப் பஞ்சம் - 1770

5. போ தெய் - வியட்நாம்

Tags : Colonialism in Asia and Africa | History | Social Science ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : One Mark Questions Answers Colonialism in Asia and Africa | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்