Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : History: The Age of Revolutions

   Posted On :  06.09.2023 06:57 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அலகு ஒன்பது

புரட்சிகளின் காலம்


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்


1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி .............. ஆகும்.

) நியூயார்க்

) பிலடெல்பியா

) ஜேம்ஸ்டவுன்

) ஆம்ஸ்டெர்டாம்

விடை:

) ஜேம்ஸ்டவுன்


2. பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ……………. .

) மிரபு

) லஃபாயெட்

) நெப்போலியன்

 ) டான்டன்

விடை:

) லஃபாயெட்


3. லஃபாயெட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் .................... எழுதப்பட்டது.

) சுதந்திர பிரகடனம்

) பில்னிட்ஸ் பிரகடனம்

) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.

) மனித உரிமை சாசனம்

விடை:

) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.


4. ……....... இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

) டிரென்டன்

) சாரடோகா

) பென்சில் வேனியா

) நியூயார்க்.

விடை:

) சாரடோகா


5. பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக .................. இருந்தது.

) வெர்செயில்ஸ்

) பாஸ்டைல் சிறைச்சாலை

) பாரிஸ் கம்யூன்

 ) ஸ்டேட்ஸ் ஜெனரல்

விடை:

வெர்செயில்ஸ்


6. ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ............. போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.

) வெர்ணா

) வெர்செயில்ஸ்

) பில்னிட்ஸ்

) வால்மி

விடை:

) வால்மி


7. 'கான்டீட்' என்ற நூல் ........... ஆல் எழுதப்பட்டது.

) வால்டேர்

) ரூசோ

) மாண்டெஸ்கியூ

) டாண்டன்

விடை:

) வால்டேர்


8. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் ..............

) ஜெரோண்டியர்

) ஜேக்கோபியர்

) குடியேறிகள்

) அரச விசுவாசிகள்

விடை:

) ஜெரோண்டியர்


9. ............... ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.

) 1776

) 1779

) 1781

) 1783

விடை:

) 1783


10. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் .......... ஆகும்.

) இயல்பறிவு

) மனித உரிமைகள்

) உரிமைகள் மசோதா

) அடிமைத்தனத்தை ஒழித்தல்

விடை:

) இயல்பறிவு

 

1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ............. .

விடை:

பெஞ்சமின் பிராங்கிளின்

2. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு ................. .

விடை:

1775

3. .......... சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.

விடை:

செலவாணி

4. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் ........... ஆவார்.

விடை:

மிரபு

5. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்தியதால் .............. கில்லட்டினால் கொல்லப்பட்டார்.

விடை:

ஹெர்பாட

6. பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது ........... நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

விடை:

வெர்னே

 

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி

1. i) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவார்.

ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது

iii) குகேவக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர். iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.

) i)மற்றும் ii) சரியானவை

) iii)சரி

) iv)சரி

) i)மற்றும் iv)சரியானவை

விடை:

) i) மற்றும் iv) சரியானவை


2. i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.

ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.

iii) வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.

iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.

) i) மற்றும் ii) சரியானவை

) iii)சரி

) iv)சரி

) i)மற்றும் iv)சரியானவை

விடை:

) i) மற்றும் ii) சரியானவை


3. கூற்று (கூ) : ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.

காரணம் (கா) : ஆங்கிலேய நிதி அமைச்சர் அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினர்.

) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

)கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

) கூற்றும் காரணமும் தவறானவை

விடை:

) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.


4. கூற்று (கூ) . : கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.

காரணம் (கா) : அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை

) கூற்றும் காரணமும் தவறானவை

) கூற்றும் காரணமும் சரியானவை

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று தவறு, காரணம் சரி.

விடை:  

) கூற்று சரி, காரணம் தவறு

 

IV. பொருத்துக.

1. ஜான் வின்திராப் - பிரான்சின் நிதி அமைச்சர்

2 டர்காட் - ஜுலை 4

3 சட்டத்தின் சாரம் - இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் 

4 மேரி அண்டாய்னெட் - மாசாசூசட்ஸ் குடியேற்றம்

5 ஏழாண்டுப் போர் - பதினாறாம் லூயி

6 அமெரிக்கச் சுதந்திர தினம் - மான்டெஸ்கியூ

விடை:

1. ஜான் வின்திராப் - மாசாசூசட்ஸ் குடியேற்றம்

2 டர்காட் - பிரான்சின் நிதி அமைச்சர்

3 சட்டத்தின் சாரம் - மான்டெஸ்கியூ 

4 மேரி அண்டாய்னெட் - பதினாறாம் லூயி

5 ஏழாண்டுப் போர் - இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்

6 அமெரிக்கச் சுதந்திர தினம் - ஜுலை 4

Tags : The Age of Revolutions | History | Social Science புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Age of Revolutions : One Mark Questions Answers The Age of Revolutions | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - புரட்சிகளின் காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்