Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

பயிர் பெருக்கம் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Botany : Chapter 9 : Plant Breeding

   Posted On :  18.12.2022 04:30 pm

12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : பயிர் பெருக்கம் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சிறு வினாக்கள்,பெறு வினாக்கள்

தாவரவியல் : பயிர் பெருக்கம்


பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்




19. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும், இரண்டாம்நிலை இரண்டாம் நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

முதல்நிலை அறிமுகப்படுத்துதல் 

அ. புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும் 

ஆ. மரபணு வகைய விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது.

இரண்டாம் நிலை அறிமுகப்படுத்துதல் 

அ. இந்த இரகமானது தேர்ந்தெடுத்தலுக்கு உட்படுத்தி அதிலிருந்து மேம்பட்ட ரசத்தைப் பிரித்தல். 

ஆ. இந்த இரகத்தை உள்ளுர் இரகத்துடன் கலந்து ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பண்புகளை அவற்றில் மாற்றுதல்

இ. எ.கா. சீனா மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிக ளிலிருந்து சேகரிக்கப்பட்ட பல தேயிலை ரகங்கள் கொல்கத்தா தாவரவியல் பூங்காவில் வளர்க்கப் பட்டு பின்னர் இந்தியாவின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

 

20. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன? 

* ரைசோபிய உயிரி வளர்ப்பு உரம் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. 

* நெல் பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா மிக விரைவாகச் சிதைவடைந்து நெற்பயிர்களை விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது. 

* ஆர்பஸ்குலார் வேர்பூஞ்சை மண்ணில் உள்ள பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறனுடையவை. 

* கடற்பாசி திரவ உரம் பயிர்களுக்கு மாவச்சத்தை அளிக்கப் பயன்படுகிறது. 

* இவ்வாறுமண்வளத்தை மேம்படுத்த நுண்ணுயிரி உட்செலுத்திகள் பயன்படுகின்றன. 

நன்மைகள் : 

* நைட்ரஜனை நிலை நிறுத்துதலிலும் பாஸ்பேட்டைக் கரைப்பதிலும் மற்றும் செல்லுலோசை சிதைப்பதிலும் செயல்திறன் மிக்கவையாக உள்ளது. 

* உயிரிய செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கின்றன. 

* மண்ணின் வளத்தையும், தாவர வளர்ச்சியையும், மண்ணில் வாழும் பயன்தரு நுண்ணுயிரிகளின் செயல்களை அதிகரிப்பதிலும் உதவுகின்றன. 

* சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வேளாண்மைக்கு உதவும் இடுபொருளாகவும், வேதிய உரங்களை விடத் திறன்மிக்கவையாகவும், விலை மலிவானதாகவும் உள்ளன. எ.கா. ரைசோபியம் 

 

21. கலப்புறுத்த முறையின் பல்வேறு வகைகளை எழுதுக. 

கலப்புறுத்தலின் வகைகள் : 

தாவரங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை வைத்து கலப்புறுத்தல் கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. 

i) ஒரே இரகத்தினுள் கலப்புறுத்தம்:

ஒரே இரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு நடை பெறுகிறது. 

ii) இரகங்களுக்கிடையே கலப்புறுத்தம்: 

ஒரே சிற்றினத்தின் இருவேறு இரகங்களுக் கிடையே கலப்பு செய்யப்பட்டுக் கலப்புயிரி உருவாக்கப்படுகிறது. 

iii) சிற்றினங்களுக்கிடையே கலப்புறுத்தம்:

ஒரு பேரினத்தின் இருவேறுபட்ட சிற்றினங்களுக்கிடையே கலப்பு நடைபெறுகிறது

எ.கா:  காசிபியம் X காசிபியம 

      ஹிர்சுட்டம்   ஆர்போரியம்

 iv) பேரினங்களுக்கிடையே கலப்புறுத்தம் :

இருவேறுபட்ட பேரினத் தாவரங்களுக்கிடையே கலப்பு நடைபெறுகிறது.

எ.கா: ரஃபானஸ் பிராசிகா X டிரிடிக்கேல் 

 

22. பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச்சிறந்த வழிமுறைகள் என்னென்ன? 

* பாரம்பரிய பயிர் பெருக்க முறைகள் பயிர் விளைச்சலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன. 

* ஒரு புதிய தாவர இரகம் அதில் ஏற்கனவே அமைந்துள்ள மரபக் கூறுகளைச் சிறந்த முறையில் வெளிக் கொணரத் தெரிவு செய்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது. 

பயிர்பெருக்க முறைகள் : 

* தேர்வு செய்தல் 

* அறிமுகப்படுத்துதல் 

* கலப்புறுத்தம்

* பன்மயம் 

* சடுதிமாற்றம் 

* திசு உற்பத்தி 

* உயிரிய தொழில்நுட்ப முறைகள் 

 

23. கலப்பின வீரியம் -- குறிப்பு வரைக.

* பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவு சந்ததி யில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் இது கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது. 

* G.H.ஷல் என்பவர் தான் முதன் முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார். 

* கலப்பின வீரியத்தின் வகைகள் : 

மெய் கலப்பின வீரியம், சடுதிமாற்ற மெய் கலப்பின வீரியம், சமநிலை மெய் கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம் 

i) மெய் கலப்பின வீரியம் : 

மரவு வழியாக பெறப்படும் கலப்பு வீரியமாகும் இது இரண்டு வகைப்படும். அவை 

அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் :

அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடு விளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப் பண்புடைய (அ) சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது?

ஆ. சமநிலை மெய்கலப்பின வீரியம் :- .

பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பின வீரியமாகும். 

ii) பொய் கலப்பின வீரியம் : 

இதனை உடல்வளவீரியம் என்றும் அழைப்பர். தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டு விளைச்சலிலும், தகவமைப்பிலும் மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. 

 

24. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக் கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக. 

பயிர்பெருக்க முறைகளில் 

* மரபணு பொறியியல் 

* தாவரத்திசு வளர்ப்பு 

* புரோட்டோபிளாச இணைவு அல்லது உடல இணைவு முறை 

* மூலக்கூறு குறிப்பு மற்றும் DNA விரல் பதிவு போன்ற நவீன பயிர்பெருக்க முறைகள் பயன் படுகின்றன. NBT - என்பது தாவரப் பயிர் பெருக்கத்தில் புதிய பண்புகளை வளர்க்கவும் வேகப்படுத்தவும் பயன்படும் வழிமுறையாகும். 

* DNA - வின் குறிப்பிட்ட இடங்களை மரபணு தொகைய திருத்தம் செய்யலாம். 

* DNA - வை குறிப்பிட்ட இடங்களில் மாற்றிப் புதிய பண்புக்கூறுகளுடைய பயிர்த்தாவரங்களை உருவாக்கலாம். 

பண்புக்கூறுகளில் மாறுதல் செய்யப் பயன்படும் படிநிலைகள்:

* மரபணு தொகையத்தை வெட்டுதல் (அ) மாற்றியமைத்தலை CRISPR/Cas போன்ற முறைகள் செய்கின்றன. 

* மரபணு தொகைய திருத்தம் - ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் தீடீர்மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் இணை காரங் களில் மாற்றம் செய்யலாம். 

* ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது (Cisgenesis) 

* DNAவை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)


Tags : Plant Breeding | Botany பயிர் பெருக்கம் - தாவரவியல்.
12th Botany : Chapter 9 : Plant Breeding : Answer the following questions Plant Breeding | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - பயிர் பெருக்கம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம்