பயிர் பெருக்கம் - மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு | 12th Botany : Chapter 9 : Plant Breeding
அலகு X
பொருளாதாரத் தாவரவியல்
பாடம் 9
பயிர் பெருக்கம்
இப்பாடத்தினை கற்போர்
* மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை அறியவும்
* வேளாண்மையின் தோற்றத்தை அடையாளம் காணவும்
* இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளவும்
* பல்வேறு மரபு சார்ந்த பயிர்ப்பெருக்க முறைகளைப் புரிந்துகொள்ளவும்
* விதைபாதுகாப்பிற்கும், விதை சேமித்தலுக்கும் உள்ள முக்கியத்துவத்தை
உணரவும்
* பழைய மற்றும் புதிய விதை சேமிப்பு முறைகளை ஒப்பிடவும் இயலும்.
9.1 மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு
9.2 தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல்
9.3 வேளாண்மையின் தோற்றம்
9.4 இயற்கை வேளாண்மை
9.5 பயிர் பெருக்கம்
9.6 பாரம்பரியப் பயிர் பெருக்க முறைகள்
9.7 நவீனதாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுட்பம்
9.8 விதை பாதுகாத்தல்
9.9 விதை சேகரம்
மனிதர்களுக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பற்றி படிப்பது பொருளாதாரத் தாவரவியல் எனப்படும். இது மனிதர்களுக்குப் பயன்படும் உணவுத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்கள் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படும் தாவரங்களைப் பற்றிய ஆய்வுப் பிரிவாகும். பொருளாதாரத் தாவரவியலானது, உழவியல், மானுடவியல், தொல்லியல், வேதியியல், சில்லறை மற்றும் பெருவணிகத் துறைகளை இணைக்கிறது.
மனிதனானவன் உயிர் வாழ முக்கியத் தேவையான தாவரங்களுடன்
பல காலங்களுக்கு முன்னரே பின்னிப்பினைந்த வாழ்க்கையை மேற்கொண்டுள்ளான். பலகட்ட சோதனை
முயற்சிகளுக்குப் பின்னர் நமது முன்னோர்கள் மனிதத் தேவைக்காக உலகின் பல பகுதிகளிலிருந்து
பலநூறு காட்டுத் தாவரங்களை வளர்ப்புப் பயிர்களாக (சாகுபடி பயிர்களாக) தேர்ந்தெடுத்தனர்.
தாவரங்களையும் அவற்றின் பயன்களைப் பற்றியதுமான இந்த அறிவு மனித நாகரிக வளர்ச்சிக்குப்
பல வகைகளில் வழிகோலியது.