பயிர் பெருக்கம் - தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் | 12th Botany : Chapter 9 : Plant Breeding
தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல்
தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல்
என்பது தாவரச் சிற்றினங்களை மனிதனின் கட்டுக்குள் கொண்டு வருவதாகும். இவற்றைக்கவனமாகத்
தேர்ந்தெடுத்தல், மரபுப்பண்பு மாற்றம் செய்தல் மற்றும் கையாளுதல் மூலமாக படிப்படியாகப்
பெரும்பாலான மக்களுக்கு உதவும் வகையில் மாற்றுதலாகும். வளர்ப்புச்சூழலுக்கு இணக்கப்பட்ட
தாவரச் சிற்றினங்கள் மனிதனுக்கு உணவு மற்றும் பல்வேறு பயன்களைத் தருகின்ற புதுப்பிக்கக்
கூடிய மூலங்களாக விளங்குகின்றன.
வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படுவதால் தாவரச்
சிற்றினங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
• பல்வேறு சூழல் காரணிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளுதல்
மற்றும் பரவலான புவிப்பரப்பில் வளரும் தன்மை கொண்டவை.
• ஒருமித்த மற்றும் சீரான முறையில் பூத்தல்
மற்றும் காய்த்தல்
• விதை சிதறல் மற்றும் விதை பரப்பல் இல்லாதிருத்தல்.
• கனிகள் மற்றும் விதைகளின் அளவை அதிகரித்தல்
• பலபருவ வளரியல்பிலிருந்து ஒரு பருவ வளரியல்புக்கு
மாற்றுதல்.
• பயிர்பெருக்க முறையில் மாற்றம்.
• அதிக விளைச்சல்
• அதிக நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறனைப்
பெற்றிருத்தல்
• விதையற்ற கனிகளைக் கருவுறாக் கனியாதல் முறை
மூலம் உருவாக்குதல்.
• நிறம், தோற்றம். உண்ணும் தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை
அதிகரித்தல்.