குறிக்கோள்கள்,படிநிலைகள் - பயிர் பெருக்கம் | 12th Botany : Chapter 9 : Plant Breeding
பயிர் பெருக்கம்
தகுந்த சூழ்நிலையில் பயிர் வகைகளில் உயர் விளைச்சல், சிறந்த தரம், நோய் எதிர்ப்புத் திறன், குறுகிய கால வாழ்நாள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அறிவியலே பயிர்ப் பெருக்கம் ஆகும். மற்றொரு வகையில் இது மனிதப் பயன்பாட்டிற்காகத் தாவரச் சிற்றினங்களின் மரபணுவகைய விகிதத்தையும், புறத்தோற்ற வகைய விகிதத்தையும் ஒரு குறிக்கோளுடன் மாற்றியமைத்துக் கையாளுதலைக் குறிக்கும். பயிர் பெருக்கத்தில் ஈடுபடும் மனிதர்களின் திறன் மற்றும் கையாளுதலைப் பொறுத்து முற்காலப் பயிர் பெருக்க முறைகள் இருந்தன. ஆனால் மரபியல் மற்றும் செல்மரபியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான பயிர்பெருக்க முறைகளான தேர்ந்தெடுத்தல், அறிமுகப்படுத்துதல், கலப்பு செய்தல், பன்மடியம், சடுதி மாற்றம், திசு வளர்ப்பு மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் போன்ற தொழில்நுட்பங்கள் பயிர் இரகங்களை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டன.
• பயிர்களின் விளைச்சலையும், வீரியத்தையும்,
வளமையையும் அதிகரித்தல்.
• வறட்சி, வெப்பநிலை, உவர்தன்மை மற்றும் அனைத்துச்
சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன்.
• முதிர்ச்சிக்கு முன்னரே மொட்டுகள் மற்றும்
பழங்கள் உதிர்வடைதலை தடுத்தல்.
• சீரான முதிர்ச்சியை மேம்படுத்தல்
• பூச்சி மற்றும் நோய் உயிரிகளை எதிர்த்து
வாழும் திறன்.
• ஒளி மற்றும் வெப்பக் கூருணர்வு இரகங்களை உருவாக்குதல்
பயிர் பெருக்கத்தின் முக்கியப் படிநிலைகள்
கீழே தரப்பட்டுள்ளன.