திசு மற்றும் திசுத் தொகுப்பு - தாவரவியல் - Answer the following questions | 11th Botany : Chapter 9 : Tissue and Tissue System

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத் தொகுப்பு

Answer the following questions

தாவரவியல் : திசு மற்றும் திசுத் தொகுப்பு - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 9

திசு மற்றும் திசுத் தொகுப்பு

 

 

6. ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?

விடை:

i) ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் செல்களில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் தொடக்க நிலையில் காணப்பட்டாலும், பின்னர் அவை சிதைந்து இறந்த செல்களாகின்றன.

ii) இவை தாங்கு திசுக்களாக தாவர பகுதிகளுக்கு வலிமை தருகின்றன.

iii) டிரக்கீடுகள் - சைலக் கூறுகளாக இருப்பதால் அவை நீரைக் கடத்துவதிலும் உதவி செய்கின்றன.


 

7. ஸ்கிலிரைடுகளின் வகைகளை விவரி.

இறந்த செல்கள் - ஒத்த விட்டம் கொண்டவை. சில நீண்ட வடிவம் கொண்டவை.

செல்சுவர் - லிக்னின் படிந்து தடிப்பாகக் காணப்படுகிறது.

செல் உள்வெளி குறுகலானது. எளிய கிளைத்த குழிகளை உடையது. 

 

வகை பெயர் & பண்பு

1. பிரேக்கி ஸ்கிலிரைடுகள் (அ) கல் செல்கள் ஒத்த விட்டம் கொண்டவை. லிக்னின் படிந்த கடின செல் சுவர் குறுகிய செல் உள் வெளி

காணப்படும் இடம் பெயர் :

பட்டை, பித், புறணி, கடின கருவூண் திசு சில கனிகளின் தசைப் பகுதி -  (பேரிக்காய்)

2. மேக்ரோஸ்கிலிரைடுகள் (அ) கழி (அ) குச்சி செல்கள் கழி (அ) குச்சி வடிவ நீண்ட செல்கள்

காணப்படும் இடம் பெயர் :

தாவர விதை வெளி - உறைகளில் காணப்படுகிறது. (லெகூம்)

3. ஆஸ்டியோஸ்கிலிரைடுகள் (அ) எலும்பு செல்கள்

காணப்படும் இடம் பெயர் :

இலைகள் மற்றும் விதையுறையில் காணப்படுகிறது. (பைசம் ஹேகியா -- விதையுறை)

4. ஆஸ்டிரோஸ்கிலிரைடுகள் (அ) நட்சத்திர செல்கள் கிளைத்த பிரிவுகளைக் கொண்டு மைய உடல் கொண்ட நட்சத்திரவடிவ செல்கள்

காணப்படும் இடம் பெயர் :

இலைகள், இலைக் காம்பு ஆகியவற்றில் காணப்படுகிறது. (தேயிலை, நிம்பையா டிரைகோடென்ட்ரான்)

5. டிரைகோஸ்கிலிரைடுகள் (அ) மயிரிழை செல்கள் மெல்லிய சுவர் கொண்ட மயிரிழை செல்கள் எண்ணற்ற நுனி பிளவுற்ற படிகங்கள் செல்சுவரில் படிந்திருக்கும்.

காணப்படும் இடம் பெயர் :

நீர் தாவர தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது.

(நிம்பையா இலைகள் மான்ஸ்டீரா காற்று வேர்கள்)

6. நூல் போன்ற ஸ்கிலிரைடுகள் (அ) நூல் செல்கள்

காணப்படும் இடம் பெயர் :

சில தாவரங்களின் இலைத்தாளில் காணப்படும் நார்கள்


 

8. சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.


1. நீண்ட குழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகள்

2. ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்து, நீண்ட குழாய்களாகிறது.

3. இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன.

4. சல்லடைக்குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணப்படுகின்றன.

5. இவை எளிய (அ) கூட்டு சல்லடைத் தட்டுக்களை கொண்டுள்ளன.

6. முதிர்ந்த சல்லடைக் குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை சைட்டோபிளாசம் மட்டுமே காணப்படும் இதில் ஸ்லைம் உடலங்கள் எனும் சிறப்பு வகை புரதம் காணப்படுகிறது.

7. உட்கரு காணப்படாததால் இதன் பணிகளை துணை செல்கள் கட்டுப்படுத்துகின்றன. 8. முதிர்ந்த சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் எனும் பொருளால் அடைப்பட்டுள்ளது.

9. உணவுப் பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலம் கடத்தப்படுகின்றன.


 

9. இரு விதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக. 


இருவிதையிலை வேர்

1. பெரிசைக்கிள் : பக்க வேர்கள் பெல்லோஜன் மற்றும் வாஸ்குலார் கேம்பியத்தின் ஒரு பகுதி பெரிசைக்கிளிலிருந்து தோன்றுகின்றன. 

2. வாஸ்குலத் திசு : பெரும்பாலும் சைலம் ஃபுளோம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

3. இணைப்புத் திசு : பாரன்கைமாவாலானது இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாட்டைகிறது.

4. கேம்பியம் : இரண்டாம் நிலை ஆக்கு திசு தோன்றுகிறது.

5. சைலம் : நான்கு முனை கொண்டவை. 

ஒருவிதையிலை வேர்

1. பெரிசைக்கிள் : பக்க வேர்கள் மட்டும் தோன்றுகின்றன.  

2. வாஸ்குலத் திசு : பெரும் சைலம் ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

3. இணைப்புத் திசு : ஸ்கிலிரைன்கைமாவாலானது. ஆனால் சில சமயங்களில் பாரன்

கைமாவாலானது இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடடைவதில்லை. 4. கேம்பியம் : முற்றிலும் இல்லை.

5. சைலம் : பொதுவாகப் பல முனை கொண்டவை.


 

10. இருவிதையிலை தண்டிற்கும், ஒரு விதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.


இரு விதையிலை தண்டிற்கும், ஒருவிதையிலை தண்டிற்கும் இடையேயான உள்ளமைப்பியல் வேறுபாடுகள்.

இருவிதையிலை தண்டு

1. புறத்தோலடித் தோல் : கோலங்கைமா செல்களாலானது

2. அடிப்படைத்திசு : புறணி, அகத்தோல் பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது.

3. தரச அடுக்கு : காணப்படுகிறது.

4. மெடுல்லா கதிர்கள் : காணப்படுகிறது.

5. வாஸ்குலக் கற்றைகள் :

அ) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை

ஆ) ஒரு வளையமாக அமைந்துள்ளன.

இ) இரண்டாம் நிலை வளர்ச்சி நடை பெறுகிறது. 

ஒரு விதையிலை தண்டு

1. புறத்தோலடித் தோல் : ஸ்கிலிரங்கைமா செல்களாலானது.

2. அடிப்படைத்திசு : வேறுபாடுறாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது

3. தரச அடுக்கு : காணப்படவில்லை

4. மெடுல்லா கதிர்கள் : காணப்படவில்லை

5. வாஸ்குலக் கற்றைகள் :

அ) ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை

ஆ) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது.

இ) இரண்டாம் நிலை வளர்ச்சி பொதுவாக நடைபெறுவதில்லை.


Tags : Tissue and Tissue System | Botany திசு மற்றும் திசுத் தொகுப்பு - தாவரவியல்.
11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Answer the following questions Tissue and Tissue System | Botany in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத் தொகுப்பு : Answer the following questions - திசு மற்றும் திசுத் தொகுப்பு - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத் தொகுப்பு