சுவாசித்தல் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 14 : Respiration
11 வது தாவரவியல் : அலகு 14
சுவாசித்தல்
6. EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் பாஸ்பேட்
நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
i) பாஸ்பரிகரணத்தில் ஈடுபடும் நொதி
a). ஹெக்சோகைனேஸ் மற்றும் பாஸ்போ ப்ரக்டோ கைனேஸ்
ii) பாஸ்பேட் நீக்கத்தில் ஈடுபடும் நொதி
a) ஃபாஸ்போ கிளிசரேட் கைனேஸ்
b) பைருவேட் கைனேஸ்
7. சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு
பூஜ்யம். ஏன்?
2C6H12O6 + 3O2 → 3C4H6O5 + 3H2O + ஆற்றல்
சதைப்பற்றுள்ள தாவரங்களில் குளுக்கோஸ்
சுவாச ஈவு = {சுழி மூலக்கூறு CO2 ] / [ 3 மூலக்கூறுகள்
O2 ]
= 0 (சுழி)
8. மைட்டோகாண்ட்ரியா உட்ச்சவ்வில் நடைபெறும் வினைகளை
விவரி.
எலக்ட்ரான்
மற்றும் ஹைட்ரஜன் (புரோட்டான்) கடத்தல் நான்கு வகையான பல்புரத கூட்டமைப்புகளின் 1 - IV) மூலம் நடைபெறுகிறது
1. கூட்டமைப்பு I (NADH டி ஹைட்ராஜினேஸ்)
இது ஹீம் அல்லாத இரும்பு சல்பர் புரதத்துடன் (Fe-S) இணைந்த
ப்ளேவோபுரதம் (FMN) கொண்டது. மைட்டோகாண்ட்ரியத்தின் NADH
+ H + (உட்புற)லிருந்து யுபிகுயினோனுக்கு (UQ)
எலக்ட்ரான்கள் புரோட்டான்கள் ஆகியவை இந்தக் கூட்டமைப்பின் உதவியால்
நிகழ்கிறது.
NADH + H+ + UQ ↔ NAD+ + UQH2
இந்தக் கூட்டமைப்பைத் தவிர, தாவரங்களின் மைட்டோகாண்ட்ரியாவில் உட்சவ்வின் வெளிப்புறப் பரப்பில் அமைந்த மற்றொரு NADH டிஹைட்ராஜினேஸ் (வெளிப்புற) கூட்டமைப்பு காணப்படுகிறது. இது சைட்டோபிளாசத்திலிருந்து வரும் NADH + H+ களை ஆக்ஸிஜனேற்ற மடையச்செய்யக் காரணமாக உள்ளது.
2. கூட்டமைப்பு II (சக்சினிக்
டி ஹைட்ராஜினேஸ்)
இது FAD ப்ளேவோ புரதம் ஹீம் அல்லாத இரும்பு சல்பர் (Fe-S) புரதத்துடன்
இணைந்த அமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு, கிரப்ஸ் சுழற்சியில்
உள்ள சச்சினேட்டிலிருந்து பியுமரேட்டாக மாறும்போது வெளியேறும் எலக்ட்ரான்கள்
மற்றும் புரோட்டான்களை எடுத்துக்கொண்டு யுபிகுயினோனுக்கு கடத்துகிறது
சக்சினேட்
+ UQ → பியுமரேட் + UQH2
3. கூட்டமைப்பு III
(சைட்டோகுரோம் b c 1 கூட்டமைப்பு)
இந்தக்
கூட்டமைப்பு ஒடுக்க நிலையிலுள்ள யுபிகுயினோனை (யுபிகுயினால்) ஆக்ஸிஜனேற்றம் அடையச்
செய்து பின்னர் எலக்ட்ரான்களை சைட்டோகுரோம் bc1
கூட்டமைப்பிலிருந்து (இரும்பு சல்பர் மைய bc1 கூட்டமைப்பு)
சைட்டோகுரோம் Cக்கு கடத்துகிறது.
4. கூட்டமைப்பு IV (சைட்டோகுரோம்
C ஆக்ஸிடேஸ்)
கூட்டமைப்பு
IV
என்பது இறுதி ஆக்ஸிடேஸ் ஆக இருப்பதுடன், இவை
மூலக்கூறுவை H2O வாக ஒடுக்கமடையச் செய்பவை.
இரண்டு புரோட்டான்கள் ஒரு மூலக்கூறுவான H2O வை
உருவாக்க தேவைப் படுகிறது. (இறுதி ஆக்ஸிஜனேற்றம்).
9. குளுக்கோஸ் உடையும் மாற்றுவழிப் பாதையின் பெயர் என்ன?
அதில் நடைபெறும் வினைகளை விவரி.
* பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் இது
குளுக்கோஸ் சிதைவடையும் மாற்று வழிப்பாதை
* இது வார்பர்க், டிக்கனஸ், லிப்மேன் என்பவர்களால் கண்டறியப்பட்டது.
எனவே வார்பர்க் டிக்கன்ஸ்-லிப்மன் வழித்தடம் எனவும் ஹெக்சோஸ் மானோஃபாஸ்பேட் ஷண்ட்
அல்லது நேரடி ஆக்ஸிஜனேற்ற வழித்தடம் எனவும் அழைக்கப்படும்.
* இதில் இரண்டு நிலைகள் காணப்படுகிறது.
ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் அக்சிஜனேற்றமில்லா நிலை.
* ஆக்சிஜனேற்ற நிகழ்ச்சியில் ஆறு
மூலக்கூறுகளான ஆறு கார்பன் கொண்ட குளுக்கோஸ் - 6
பாஸ்பேட் ஆனது ரிபுலோஸ் - 5 ஃபாஸ்பேட்டமாக மாற்றமையும் போது 6CO2
மூலக்கூறுகள் மற்றும் 12 NADPH + H+ (NADH இல்லை) உருவாக்கப்படுகிறது.
* பின்பு நடைபெறும்' வினைகள் ஆக்ஸிஜனேற்றமில்லா வினையாகும். இதில் ரிபுலோஸ் – 5 ஃபாஸ்பேட் மூலக்கூறுகள் பலதரப்பட்ட இடைப் பொருள்களான ரைபோஸ் 5 ஃபாஸ்பேட் (5C)
* சைலுலோஸ் 5
ஃபாஸ்பேட் (5C)
* கிளிசரால்டிஹைடு - 3 ஃபாஸ்பேட் (3C)
* கிளிசரால்டிஹைடு - 3 ஃபாஸ்பேட் (3C)
* செடோஹெப்டுலோஸ் - 7 ஃபாஸ்பேட் (7C) மற்றும்
* எரித்ரோஸ் – 4 - ஃபாஸ்பேட்
(4C) உருவாகிறது.
இறுதியாக ஐந்து மூலக்கூறுகளான குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட் மீண்டும் உருவாகிறது.
நிகர
லாபமாக ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட்
முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து 6CO2 மற்றும் 12
NADPH + H+ நிகர லாபமாக உருவாகிறது.
10. காற்று சுவாசித்தலின் போது ஒரு மூலக்கூறு சுக்ரோஸ்
முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் நிகர விளைபொருள்களை தற்போதைய பார்வையில்
எவ்வாறு கணக்கிடுவாய்.
* சுக்ரோஸ் என்பது ஒரு டைசாக்கரைடு ஆகும். இது
குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸாக மாறுகிறது. இவை இரண்டுமே கிளைக்காலைஸிஸ் வினையில்
ஈடுபட்டு கிளிசரால்டிஹைடு - 3 - ஃபாஸ்பேட்டை கொடுக்கும்.
* இது அடுத்தடுத்த சுவாச வினைகளில் ஈடுபட்டு 36 ATP
க்களை கொடுக்கும்.
* எனவே ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் காற்று
சுவாசித்தலின் போது 72 ATP க்களை கொடுக்கும்.