சுவாசித்தலின்
வகைகள் (Types of Respiration)
காற்று சுவாசித்தல் மற்றும் காற்றில்லாச் சுவாசித்தல்
என இரண்டு வகைகளாகச் சுவாசித்தல் பிரிக்கப்படுகிறது (படம் 14.4).
ஆக்ஸிஜன் உள்ள போது நடைபெறும் சுவாசித்தல் காற்று சுவாசித்தல் எனப்படும். காற்று சுவாசித்தலின்
போது உணவுப் பொருட்களான கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் முழுவதும்
ஆக்ஸிஜனேற்றமடைந்து CO2, H2O மற்றும் ஆற்றல் வெளியிடப்படுகிறது.
காற்று சுவாசித்தல் மிகச் சிக்கலான ஒரு நிகழ்ச்சியாகும். இது நான்கு படிநிலைகளில் நடைபெறுகிறது
1. கிளைக்காலைசிஸ்
2. பைருவேட் ஆக்ஸிஜனேற்றம் (இணைப்பு வினை)
3. கிரப்ஸ் சுழற்சி (TCA சுழற்சி)
4. எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி (இறுதி ஆக்ஸிஜனேற்றம்)
ஆக்ஸிஜன் மூலக்கூறு இல்லாத போது குளுக்கோஸ் முழுமையற்றுச்சிதைந்து எத்தில் ஆல்கஹாலாகவோ அல்லது லாக்டிக் அமிலமாகவோ மாறுகிறது (அட்டவணை 14.1). இதில் இரண்டு படிநிலைகள் உள்ளது
1. கிளைக்காலைசிஸ்
2. நொதித்தல்
அட்டவணை
14.1 காற்று மற்றும் காற்றிலாச் சுவாசித்தலுக்கிடையே வேறுபாடுகள்
காற்று
சுவாசித்தல்
1. இது உயர் நிலை உயிரினங்களின் அனைத்து
உயிருள்ள செல்களிலும் நடைபெறுகிறது.
2. சுவாசத் தளப்பொருள் உடைவதற்கு ஆக்ஸிஜன்
தேவைப்படுகிறது.
3. CO2 மற்றும் H2O
இறுதி விளைபொருள்கள் ஆகும்.
4. ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றமடையும்
போது 36 ATP மூலக்கூறுகளை உருவாக்குகிறது.
5. கிளைக்காலைசிஸ், இணைப்பு வினை,
TCA சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி போன்ற நான்கு நிலைகள் காணப்படும்.
6. சைட்டோபிளாசம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவில் இது நடைபெறுகிறது.
காற்றிலாச்
சுவாசித்தல்
1. பூஞ்சை மற்றும் சில பாக்டீரியங்களில்
இது நடைபெறுகிறது.
2. சுவாசத் தளப்பொருள் உடைவதற்கு ஆக்ஸிஜன்
தேவையில்லை.
3. ஆல்கஹால் மற்றும் CO2
அல்லது லாக்டிக் அமிலம் இறுதி விளைபொருள்கள் ஆகும்.
4. 2 ATP மூலக்கூறுகள் மட்டும் உருவாகிறது.
5. கிளைக்காலைசிஸ் மற்றும் நொதித்தல்
போன்ற இரண்டு நிலைகள் காணப்படும்.
6. சைட்டோபிளாசத்தில் மட்டும் இது நடைபெறுகிறது.