தாவரவியல் - காற்றிலா சுவாசித்தல் | 11th Botany : Chapter 14 : Respiration
காற்றிலா
சுவாசித்தல்
சில உயிரினங்கள் ஆக்ஸிஜன் அற்ற நிலையில் சுவாசிக்கிறது.
இந்த நிகழ்ச்சி நொதித்தல் அல்லது காற்றிலா சுவாசித்தல் எனப்படும் (படம்
14.12). மூன்று வகையான நொதித்தல் உள்ளது.
1. ஆல்கஹாலிக் நொதித்தல்
2. லாக்டிக் அமில நொதித்தல்
3. கலப்பு அமில நொதித்தல்
நீர் தேங்கிய மண்ணில் உள்ள வேர்களின் செல்களில் ஆல்கஹாலிக்
நொதித்தல் முறையில் சுவாசிக்கிறது ஏனெனில் ஆக்சிஜன் அற்ற சூழலில் பைருவிக் அமிலம் எத்தில்
ஆல்கஹால் மற்றும் CO2 வாக மாறுகிறது. ஈஸ்ட்டின் (சக்காரோமைசிஸ்) பல சிற்றினங்களில்
காற்றிலா முறையிலும் சுவாசித்தல் நடைபெறுகிறது. இந்த வினை இரண்டு படி நிலைகளில் நடைபெறுகிறது.
(i) 2CH3COCOOH
பைருவேட் டிகார்பாக்ஸிலேஸ் → 2CH3CHO + 2CO2↑
பைருவிக் அமிலம் அசிட்டால்டிஹைடு
1. ரொட்டி, கேக், பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்குப் பேக்கரிகளில்
பயன்படுகிறது.
2. ஒயின் மற்றும் ஆல்கஹாலிக் மதுபானங்கள் தயாரிக்க
மதுபானத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது
3. வினிகர், மற்றும் டானின்கள் தோல் தொழிற்சாலைகளிலும்
பயன்படுத்தப்படுகிறது.
4. எத்தனாலிருந்து கேசோஹால் (பிரேசிலில் கார்களில்
பயன்படுத்தப்படும் எரிபொருள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
சில பாக்டீரியங்கள் (பேசில்லஸ்), பூஞ்சை மற்றும் முதுகெலும்பிகளின்
தசைகளில் பைருவிக் அமிலத்திலிருந்து லாக்டிக் அமிலமாக மாறுகிறது (படம் 14.3).
இந்த வகை நொதித்தல் எண்டிரோபாக்டீரியேசியின் சிறப்பு
பண்பு. நொதித்தலின் விளைவாக லாக்டிக் அமிலம், எத்தனால், ஃபார்மிக் அமிலம் வாயுக்களான
CO2 மற்றும் H2 உருவாகின்றன.
1. காற்று சுவாசத்தைவிடக்காற்றிலாசுவாசித்தல் குறைந்த திறனுடையவை (படம் 14.12) (அட்டவனை 14.4).
2. ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து குறைந்த எண்ணிக்கையுடைய ATP மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது (அட்டவணை 14.5).
3. CO2 உருவாக்கம் மற்றும் ஒளிச்சேர்க்கையில் கார்பன் நிலைநிறுத்தப்படுதல் போன்றவற்றிற்கு இது பயன்படுகிறது.
* ஒரு ஒடுக்க NAD மூன்று ATP மூலக்கூறுகளுக்குச் சமமானது
நீங்கள்
கற்றதை சோதித்தறிக.
• நுண்ணுயிரிகள் காற்றிலா முறையில் சுவாசிப்பது
ஏன்?
• உயர் தாவரங்களில் காற்றிலா முறையில்
சுவாசித்தல் நடைபெறுமா?
ஆல்கஹாலிக் நொதித்தலை
நிரூபித்தல்
கூன் குடுவை நொதித்தல் குழாயை எடுத்துக்கொள்.
இதில் நேராக அமையப் பெற்ற பக்கவாட்டுக் குழாயுடன் ஒரு நேரான கண்ணாடிக் குழாயைக் கொண்ட
ஒரு கூன் நொதித்தல் குழாயை எடுத்துக் கொள். 10% சர்க்கரை கரைசல் ரொட்டி ஈஸ்ட்டுடன்
சேர்த்து நொதித்தல் குழாயுடன் நிரப்பிப் பஞ்சு அடைப்பானால் மூடிவிடவும். சில நிமிடத்திற்குப்
பிறகு குளுக்கோஸ் கரைசல் நொதித்தலுக்கு உட்படுகிறது. கரைசலில் ஆல்கஹால் மணம் வெளிப்படுகிறது.
கண்ணாடி தண்டில் உள்ள கரைசலின் மட்டம் குறைகிறது. CO2 வாயு சேகரிக்கப்படுவதால்.
ஈஸ்டில் உள்ள சைமேஸ் நொதியானது குளுக்கோஸ் கரைசலை ஆல்கஹால் மற்றும் CO2
ஆக மாற்ற உதவுகிறது.
தற்போது KOH படிகத்தினைக் குழாய்க்குள் செலுத்தும்போது KOH, CO2 ஐ உறிஞ்சி குழாயில் உள்ள கரைசலின் மட்டம் உயருகிறது (படம் 14.17).
செயல்பாடு
சீஸாவில் மிதமான சூடான தண்ணீரை நிரப்பி
அதனுள் ரொட்டி ஈஸ்ட்டுடன் சர்க்கரையைக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்குப்
பிறகு நீர்குமிழிகள் ஈஸ்ட் செயல்பாட்டினால் CO2 வாக உருவாகிறது. பலூனை எடுத்துச்
சீஸாவின் வாயில் பொருத்த வேண்டும். 30 நிமிடத்திற்குப் பிறகு பலூன் நேராக நிற்பதைக்
காணமுடிகிறது. (படம் 14.14)