பென்டோஸ்
ஃபாஸ்பேட் வழித்தடம் [பாஸ்போ குளுக்கோனேட் வழித்தடம்]
சுவாசித்தலின் போது சைட்டோசோலில் குளுக்கோஸ் உடைவது கிளைக்காலைசிஸ் (2/3 பகுதி) மற்றும் ஆக்ஸிஜனேற்ற பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் (1/3 பகுதி) ஆகிய இரண்டிலும் நடைபெறுகிறது. பெண்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் வார்பர்க், டிக்கன்ஸ், லிப்மேன் (1938) என்பவர்களால் கண்டறியப்பட்டது. எனவே இது வார்பர்க் - டிக்கன்ஸ் -லிப்மேன் வழித்தடம் எனவும் அழைக்கப்படும். இது முதிர்ந்த தாவரச் செல்களின் சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது. இது குளுக்கோஸ் சிதைவடையும் மாற்று வழிப்பாதை (படம் 14.15).
ஹெக்சோஸ் மானோ ஃபாஸ்பேட் ஷண்ட் (Hexose Mono phosphate Shunt-(HMP Shunt)) அல்லது நேரடி ஆக்ஸிஜனேற்ற வழித்தடம் எனவும் அழைக்கப்படும்.
இதில் இரண்டு நிலைகள் காணப்படுகிறது. ஆக்சிஜனேற்ற நிலை
மற்றும் ஆக்சிஜனேற்றமில்லா நிலை. ஆக்சிஜனேற்ற நிகழ்ச்சியில் ஆறு மூலக்கூறுகளான ஆறு
கார்பன் கொண்ட குளுக்கோஸ்-6-ஃபாஸ்பேட் ஆனது ரிபுலோஸ் -5- ஃபாஸ்பேட்டாக மாற்றமடையும்
போது 6CO2 மூலக்கூறுகள் மற்றும் 12
NADPH + H+ (NADH இல்லை) உருவாக்கப்படுகிறது. பின்பு நடைபெறும் வினைகள்
ஆக்ஸிஜனேற்றமில்லா வினையாகும். இதில் ரிபுலோஸ்-5- ஃபாஸ்பேட் மூலக்கூறுகள் பலதரப்பட்ட
இடைப்பொருள்களான ரைபோஸ்-5ஃபாஸ்பேட் (5C). சைலுலோஸ் 5-ஃபாஸ்பேட் (5C), கிளிசரால்டிஹைடு
- 3 - ஃபாஸ்பேட் (3C) , செடோஹெப்டுலோஸ்-7- ஃபாஸ்பேட் (7C) மற்றும் எரித்ரோஸ்-4-ஃபாஸ்பேட்(4C)
உருவாகிறது. இறுதியாக ஐந்து மூலக்கூறுகளான குளுக்கோஸ்-6-ஃபாஸ்பேட் மீண்டும் இந்த வழித்தடத்தில்
உருவாகிறது (படம் 14.16). இதன் ஒட்டுமொத்த வினை பின்வருமாறு:
ஓரு மூலக்கூறு குளுக்கோஸ்-6-ஃபாஸ்பேட் முழுவதுமாக ஆக்சிஜனேற்றமடைந்து 6CO2 மற்றும் 12 NADPH + H+ நிகர லாபமாக உருவாகிறது. ஆக்சிஜனேற்ற பெண்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் குளுக்கோஸ்-6-ஃபாஸ்பேட் டிஹைட்ராஜினேஸ் என்ற நொதியினால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இதனைத் NADPH லிருந்து NADP+ க மாறும் அதிக விகிதம் இதனை தடை செய்கிறது.
1. HMP ஷண்ட் இரண்டு முக்கியமான விளைபொருள்களான NADPH மற்றும் பெண்டோஸ் சர்க்கரைகள் உருவாக்கத்துடன் தொடர்புடையது, கட்டப்படும் வளர்வினைகளுக்கு இது முக்கியப் பங்காற்றுகிறது.
2. உருவாக்கப்பட்ட இணைநொதி NADPH ஒடுக்க உயிர் உற்பத்தி வினைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஆக்ஸிஜன் தனி மூலக்கூறுகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
3. ரைபோஸ்-5-ஃபாஸ்பேட் மற்றும் அதன் வழிபொருள்கள் DNA, RNA, ATP, NAD+, FAD மற்றும் இணைநொதி A ஆகிய உருவாக்கத்திற்குப் பயன்படுகிறது.
4 ஆந்தோசயனின், லிக்னின் மற்றும் பிற அரோமேடிக் சேர்மங்கள் உருவாக்கத்திற்கு எரித்ரோஸ் பயன்படுகிறது.
5 இது ஒளிச்சேர்க்கையின் போது RUBP மூலமாக CO2-வை நிலை நிறுத்திக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.