ஒடுக்க
ஆக்ஸிஜனேற்ற வினைகள் (Redox reactions)
ஆக்ஸிஜனேற்ற நிலையில் உள்ள NAD+ (நிகோட்டினமைடு
அடினைன் டைநியுக்ளியோடைடு) மற்றும் FAD (ப்ளேவின் அடினைன் டைநியுக்ளியோடைடு) எலக்ட்ரான்கள்
ஒன்று அல்லது இரண்டு ஹைட்ரஜன் அயனிகளை (புரோட்டான்கள்) ஏற்றுக் கொண்டு முறையே NADH
+ H+ மற்றும் FADH2 என்ற ஒடுக்க நிலைக்கு மாறுகின்றன. இவை எலக்ட்ரான்கள்
மற்றும் ஹைட்ரஜனை இழக்கும் போது மீண்டும் ஆக்ஸிஜனேற்ற நிலைக்குத் திரும்புகின்றன.
NAD+ மற்றும் FAD எலக்ட்ரான்களை ஏற்றுக் கொண்டோ (ஒடுக்கம்) அல்லது இழந்தோ
(ஆக்ஸிஜனேற்றம்) நடைபெறும் வினைகள் ஒடுக்க
ஆக்ஸிஜனேற்ற வினைகள் (ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்) எனப்படுகின்றன. செல் சுவாசித்தலில்
இந்த வினைகளே முக்கியப் பங்காற்றுகின்றன.
Handy
mnemonic
LEO என்னும் சிங்கம் கர்ஜிக்கிறது.
(LEO the lion says GER)
LEO - Loss Of Electrons - Oxidation
எலக்ட்ரான்கள் இழப்பு (ஆக்ஸிஜனேற்றம்)
GER- Gain Of Electrons - Reduction
எலக்ட்ரான்கள் ஏற்பு (ஒடுக்கம்)