ஆல்கஹாலிக் நொதித்தலை நிரூபித்தல்
கூன் குடுவை நொதித்தல் குழாயை எடுத்துக்கொள். இதில் நேராக அமையப் பெற்ற பக்கவாட்டுக் குழாயுடன் ஒரு நேரான கண்ணாடிக் குழாயைக் கொண்ட ஒரு கூன் நொதித்தல் குழாயை எடுத்துக் கொள். 10% சர்க்கரை கரைசல் ரொட்டி ஈஸ்ட்டுடன் சேர்த்து நொதித்தல் குழாயுடன் நிரப்பிப் பஞ்சு அடைப்பானால் மூடிவிடவும். சில நிமிடத்திற்குப் பிறகு குளுக்கோஸ் கரைசல் நொதித்தலுக்கு உட்படுகிறது. கரைசலில் ஆல்கஹால் மணம் வெளிப்படுகிறது. கண்ணாடி தண்டில் உள்ள கரைசலின் மட்டம் குறைகிறது. CO2 வாயு சேகரிக்கப்படுவதால். ஈஸ்டில் உள்ள சைமேஸ் நொதியானது குளுக்கோஸ் கரைசலை ஆல்கஹால் மற்றும் CO2 ஆக மாற்ற உதவுகிறது.
செயல்பாடு
சீஸாவில் மிதமான சூடான தண்ணீரை நிரப்பி
அதனுள் ரொட்டி ஈஸ்ட்டுடன் சர்க்கரையைக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்குப்
பிறகு நீர்குமிழிகள் ஈஸ்ட் செயல்பாட்டினால் CO2 வாக உருவாகிறது. பலூனை எடுத்துச்
சீஸாவின் வாயில் பொருத்த வேண்டும். 30 நிமிடத்திற்குப் பிறகு பலூன் நேராக நிற்பதைக்
காணமுடிகிறது. (படம் 14.14)
பலூன்
ஏன் நேராக நிற்கிறது?