தாவர
வளர்ச்சியை அளவிடுதல்
ஆய்வு:
1.வில் ஆக்ஸனோமீட்டர்:
தாவரத் தண்டின் நீள்வளர்ச்சியை எளிதாக
வில் ஆக்ஸனோமீட்டர் மூலம் அளக்கலாம். சிறிய கப்பியின் மைய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள
நீண்ட குறிமுள் அளவுகள் குறிக்கப்பட்ட வில் மீது நகருமாறு அமைக்கப்பட்டுள்ளது. நூலின்
ஒரு முனை தண்டின் நுனியுடன் கட்டப்பட்டிருக்கும். மற்றொரு முனை எடைக்கல்லுடன் கட்டப்படுவதால்
கப்பி மீது நூல் இறுக்கமாகச் செல்கிறது. தாவரத் தண்டின் நுனி உயரத்தில் அதிகரிக்கும்
போது கப்பி நகர்வதால் குறிமுள் அளவுகள் குறிக்கப்பட்ட வில்லில் கீழ்நோக்கி நகர்கிறது
(படம் 15.7) அளவுகள் குறிக்கப்படுகிறது. கப்பியின் ஆரம் மற்றும் குறிமுள்ளின் நீளம்
ஆகியவற்றின் அளவுகளைப் பயன்படுத்தித் தண்டின் உண்மையான நீள் வளர்ச்சியை அறியலாம். குறிமுள்
நகர்த்த ஆரம் 10 செ.மீ , கம்பியின் ஆரம் 4 செ.மீ, குறிமுள்ளின் நீளம் 20 செ.மீ என இருந்தால்
கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
தாவரத்தின் உண்மையான வளர்ச்சி = குறிமுள்
நகர்ந்த தூரம் x கப்பியின் ஆரம் / குறிமுள்ளின் நீளம்
எடுத்துக்காட்டாக,
தாவரத்தின் உண்மையான வளர்ச்சி = 10
x 4 செ.மீ / 20 செ.மீ = 2 செ.மீ