தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - தட்பப்பதனம் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development
தட்பப்பதனம்
(Vernalization)
ஒளிக் கால அளவை தவிர மலர்தலை உண்டாக்க சில தாவரங்களின்
ஆரம்பகால வளர்நிலையின் போது குறைந்த அளவு வெப்பநிலை ஏற்பு ஒன்று தேவைப்படுகிறது. இரு
பருவ மற்றும் பல பருவதாவர சிற்றினங்களில் குறைந்த வெப்பநிலைக்கு (0°C முதல் 5°C) உட்படுத்தி
மலர்தல் தூண்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தட்பப்பதனம்
எனப்படும். தட்பப்பதனம் என்ற வார்த்தையை முதன் முதலில் என்பவரால் பயன்படுத்தப்பட்டது
T.D.
லைசென்கோ (1938).
தட்பப்பதனத்தினை விளக்க இரு முக்கிய கருதுகோள்கள் நிலவுகின்றன.
i. ஆக்க வளர்ச்சி கட்டங்கள் சார்ந்த கருதுகோள் (Hypothesis of phasic development)
ii. ஹார்மோன் சார்ந்த கருதுகோள் (Hypothesis of hormonal involvement)
லைசென்கோவின் கூற்றுப்படி, ஒரு பருவ விதைத் தாவரங்களின் வளர்ச்சி இரு நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் நிலை வெப்பமான நிலை, அதாவது உடல் வளர்ச்சி நிலையில் குறைவான வெப்பநிலை மற்றும் உகந்த ஈரப்பதம் தேவைப்படுகிறது. அடுத்த நிலை ஒளி நிலை இதில் அதிக வெப்பநிலை ஃப்ளோரிஜன் (மலர்தல் ஹார்மோன்) உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
பர்விஸ் (Purvis) ன் (1911) கூற்றுப்படி
முன்னோடி பொருள் ஒன்றிலிருந்து A எனும் பொருள் உருவாகிறது பின்னர் குளிர் நிலைக்கு
உட்படுத்தப்பட்டு அது B யாக மாறுகிறது. B எனும் பொருள் மிகவும் நிலையற்றது . உகந்த
வெப்பநிலையில் B நிலையான சேர்மமாகிய D-ஆக மாறுகிறது இது வெர்னலின் எனப்படும். வெர்னலின்
பின்னர் F ஆக மாறுகிறது. ஃப்ளோரிஜன் மலர்
உருவாக்கத்தினை தூண்டுகிறது. ஆனால் அதிக வெப்பநிலையில் B பொருள் C ஆக மாறுகிறது மற்றும்
தட்பப்பதன விளைவு நீக்கமும் நடைபெறுகிறது (படம் 15.11).
விதைகளை முதலில் நீரில் ஊற வைத்து அவற்றை 10°C முதல்
12°C க்கு உட்படுத்தி முளைக்க வைக்க வேண்டும். பின்னர் விதைகளை குறைந்த வெப்பநிலைக்கு
(3°C முதல் 5°C க்கு) சில நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். முளைக்கும்
விதைகளை இந்த செயல்முறைக்கு பிறகு உலர வைத்து நிலத்தில் நட வேண்டும். இந்த தாவரங்கள்
சோதனைக்கு உட்படாத தாவரங்களை காட்டிலும் விரைவாக மலர்தலை நிகழ்த்தும்.
தட்பப்பதனத்தின் தலைகீழான விளைவு தட்பப்பதன நீக்கம் எனப்படும்.
1. தட்பப்பதனம் தழை உடல் பகுதி கால அளவை குறைத்து விரைந்து
மலர்கள் உருவாதலை தூண்டுகிறது.
2. தாவரங்களின் குளிர் எதிர்ப்புதன்மையை அதிகரிக்கிறது.
3. தாவரங்களின் பூஞ்சை நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத்
தன்மையை இது தூண்டுகிறது.
4. தாவரப் பயிர்பெருக்கத்தை விரைவுபடுத்த உதவுகிறது.