தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development
தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்
மதிப்பீடு
1. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு:
அ) உருவாக்க கட்டத்தில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும்.
ஆ) நீட்சியுறு கட்டத்தில் மைய வாக்குவோல் செல்லில்
தோன்றுகிறது.
இ) முதிர்ச்சியுறு கட்டத்தில் தடிப்படைதல் மற்றும்
வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது.
ஈ) முதிர்ச்சியுறு கட்டத்தில் செல்கள் மேலும் வளர்கிறது.
2. கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம்
10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான
நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
(அ) 3 அங்குலம்
(ஆ) 6 அங்குலம்
(இ) 12 அங்குலம்
(ஈ) 30 அங்குலம்
(உ) 15 அங்குலம்
கப்பி விட்டம் = 6 அங்குலம்
கப்பியின் ஆரம் = 3 அங்குலம்
நீளத்தின் உண்மையான வளர்ச்சி = [சுட்டி மூலம் பயணிக்கும் தூரம் x கப்பியின் ஆரம்] / சுட்டியின் நீளம்
= [5 x 3] / 10 = 1.5
3. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால்
இனமாற்றம் நிகழ்கிறது.
(அ) எத்தனால்
(ஆ) சைட்டோகைனின்
(இ) ABA
(ஈ) ஆக்சின்
4. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
1) மனிதச் சிறுநீர் - i) ஆக்சின் B
2) மக்காச்சோள எண்ணெய் - ii) GA3
3) பூஞ்சைகள் - iii) அப்சிசிக் அமிலம் II
4) ஹெர்ரிங் மீன் விந்து - iv) கைனடின்
5) இளம் மக்காச்சோளம் - v) ஆக்சின் A
6) இளம் பருத்திக் காய் - vi) சியாடின்
அ) 1 – iil, 2 – iv, 3 – V, 4 - vi, 5 -1, 6 - ii
ஆ) 1 - V, 2 -i, 3 - ii, 4 - iv, 5 - vi, 6 - iii
இ) 1 - iil, 2 – V, 3 – vi, 4 – 1, 5 - ii, 6 - iv
ஈ) 1 - ii, 2 - iii, 3 – V, 4 - vi, 5 - iv, 6 – i
5. தாவரங்களின் விதை உறக்கம்
அ) சாதகமற்ற பருவ மாற்றங்களைத் தாண்டி வருதல்
ஆ) வளமான விதைகளை உருவாக்குதல்
இ) வீரியத்தைக் குறைக்கிறது
ஈ) விதைச்சிதைவை தடுக்கிறது
6. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க
பயன்படுத்தப்படுகின்றன?
அ) விதையுறை செதுக்கீடு
ஆ) மோதல் நிகழ்த்துதல்
இ) அடுக்கமைத்தல்
ஈ) இவை அனைத்தும்
7. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை?
8. மலர்கள் தோற்றுவித்தல் ஒளிக்காலத்துவத்தின் செயல்பாடுகள்
பற்றி விவரி.
9. திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறுகுறிப்பு
தருக.
10. வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் செயலியல்
விளைவுகள் யாவை?
11. உயிர்சார் இறுக்கத்தின் செயல் நுட்பங்களை விளக்குக.